சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறு நீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 35 துண்டு சிறு நீரக கல்அகற்றப்பட்டுள்ளன.
யூ.எம்.இஸ்ஹாக் -நற்பிட்டிமுனை
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை 09.11.2013 சம்மாந்துறையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு செய்யப்பட்ட சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறு நீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 35 துண்டு சிறு நீரக கல் அகற்றப்பட்டுள்ளன.
அத்தோடு இன்னுமொருவருக்கு பெரியளவிலான சிறுநீரக கல் ஓன்று சத்திர சிகிச்சி மூலம் அன்றய தினம் அகற்றப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிறுநீரக கல்லில் ஒன்று மான்கொம்பு வடிவிலானதாகும் எனவூம் குறித்த நோயாளி யின் குருதி(ழு-) வகயானதாகையால் அம்பாறை மாவட்ட வைத்திய சாலைகளில் இந்த வகை குருதியை பெறுவது கடினமாக இருந்த தாகவூம் அம்பாறை வைத்திய சாலையில் இருந்து உதவியாகப் பெற்ற ஒரு பைந் இரத்தத்தை மாத்திரம் நம்பி வைத்துக்கொண்டு இந்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாகவூம் கல்முனை அஷ்ரப் வைத்திய சாலை மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக அறுவை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏஇடபிள் யூ.எம்.சமீம் தெரிவித்தார் .
நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்தி செய்யப்பட வேண்டிய சத்திர சிகிச்சைகளை எந்தொவொரு வசதியூம் இல்லாமல் சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யப்படுகின்றது என்பதை சுகாதார துறையினர் கவனத்தில் கொள்ளவேண்டும்
சமீபகாலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுநீரக கல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவூம் இது தொடர்பான ஆய்வூ நடத்தப்பட வேண்டும் எனவூம் வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த சிறுநீரக கல் தொடர்பாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏஇடபிள் யூ.எம்.சமீம் இவ்வாறு தெரிவித்தார்
இன்று இலங்கையைப் பொறுத்தவரைக்கும் அதிகரித்துக் கொண்டு வரும் ஒரு நோயாக விளங்குவது தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் என்பது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலிஇ அடிவயிற்று வலிஇ சிறுநீர் கழிப்பதில் எரிவூஇ மற்றும் அவ்வாறு கழிக்கும்போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
இதற்கெல்லாம் மூலக்காரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். ஆமாம் மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3 – 4 லீற்றர் வரைக்குமான நீரை அருந்த வேண்டும். அது மிகவூம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம்இ வவூனியா இஅநுராதபுரம் போன்ற இடங்களில் எல்லாம் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந்நீரை அப்படியே பருகாது அதனை சு+டாக்கி அந்நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.
உங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல்இ சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
அவ்வாறு இக்கல் உருவாகி சிறுநீர் அடைபடுமானால் அதனை வைத்தியர்கள் ருடவசயளுழரனெ ளுஉயn செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்துஇ அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அச்சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.
இதற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணம் நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால் அது சிறுநீரில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவூகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.
இதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமா? ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள். இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக் கொள்ளலாம்.
எந்தவொரு வசதியூம் இல்லாத சம்மாந்துறை வைத்திய சாலையில் அண்மைக்காலமாக பாரிய சத்திர சிகிச்சைகள் நடை பெறுவதை அவதானிக்கின்றௌம் . இந்த வைத்திய சாலையின் வளத்தைப் பெருக்க சம்மாந்துறை ஊரைப் பிறப்பிடமாக கொண்ட கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சு+ர் தலைமையில் சம்மாந்துறை பொது மக்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்
Comments
Post a Comment