அரசாங்க கட்டிடங்களில் தேசிய கொடியை பறக்கவிட அரசாங்கம் வேண்டுகோள்
உச்சிமாநாடு, ஜனாதிபதியின் பதவியேற்பு 4 வருட பூர்த்தி
நாளை முதல் 19ஆம் திகதி வரை
இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பின் 4 ஆவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு நாளை (14) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங்களின் கட்டிடங்களில் தேசிய கொடியேற்றுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கலான சகல அரச நிறுவன தலைவர்களுக்கும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார்.
இதேபோன்று தனியார் நிறுவனங்கள், வீடுகள் என்பவற்றிலும் தேசிய கொடியேற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
Comments
Post a Comment