அரசியலும் – இலக்கியமும்
ஏ.எம்.பறகதுல்லா
அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல் வாதிகள் தவறிழைப்பவர்கள் என்றும் எதிலுமே தொடர்புபடாத சிலர் பேசுவதுண்டு. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களுக்குள்ளும் ஆதவளர்களுக்குள்ளும் மோதல்கள் வருவது ஒரு சாதரணமாகவே கருதப்படுகின்றது. தேர்தலுக்கு பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து விடுவதும் பழகிப்போன விடயமாக இருக்கிறது. வேறுபட்ட கட்சி பிரதிநிகள் பொது சபைகளில் ஓன்று கூடும்பொது அவர்களுக்குள் சில வேளைகளில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவரை மற்றொருவர் தாக்கியும் பேசுவது பழகிப்போன விடயமே எனலாம்.
இன்னும் சந்திகளிலும், கடைகளிளலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சிலர் யாராவது ஒரு அரசியல்வாதியின் பெயரை உச்சரித்து அவரை தாறுமாறாக விமர்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் அவர்களால் விமர்சிக்கப்படும் குறித்த அரசியல்வாதியினை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடன் கைகுலுக்கவும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவும் முந்திக்கொள்வதையும் பல தடவைகளில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மிக நீண்ட காலமாக இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர் நண்பர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அது இன்றுவரை தொடந்து வருகிறது. இதில் அரசியலைப்போல் இலக்கியவாதிகளுக்குள்ளும் அரசியலைப்போல் மோதல்கள் காணப்படுகின்றதை என்னால் அவதனிக்கக்கூடிய இருந்தது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என சொல்லுவதைபோல் இலக்கியத்தையும் சொல்ல முடியும் என எனக்கு தோணுகின்றது. அத்தோடு அரசியல்வாதிகளின் ஆதரவளர்களைபோல் இலக்கியவாதிகளின் வாசகர்கள் மோதிக்கொள்வாதில்லை.
அரசியல்வாதிகள் தமது எதிப்பு பேச்சுக்களை மேடைகளிலும் அறிக்கைகள் மூலமும் வெளிப்படுத்துவர், அதுபோலவே இலக்கியவாதிகளும் நிகழ்வுகள், கட்டுரைகள், கதைகள் மற்றும் நூல்கள் மூலம் வெளிப்படுத்துவர். அரசியல் நடவடிக்கைக்கும் இலக்கியவாதிகளுக்கு ஒரேவிதமான் சில தொடர்புகள் இருக்கின்றது என்பதை என்னால் உணர முடிந்தது. மேலும் அரசியல்வாதிகள் இலக்கியவதிகளாகவும் காணப்படுவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
இத்துறைகள் இரண்டையும் தனித்தனியே பார்க்கும்போது அரசியல்வாதிகள் குறுகிய காலத்திற்கே இவ்வாறன பண்புடையவர்களாக காணப்படுவர். ஆனால் இலக்கியவாதி தனது இறுதிக்காலம்வரை தனது இலக்கியதுறையினை கைவிடுவது கிடையாது. அதனால் அரசியலை விட இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர்களுக்கிடையேதான் விமர்சனங்களும் மோதல்களும் அதிகம் ஆட்கொண்டு விட்டது என்பதையே என்னால் சொல்லத்தோணுகின்றது.
Comments
Post a Comment