சம்மாந்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் மருதமுனை விசேட அதிரடிப்படையினரால் கைது
யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் மருதமுனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று 13.11.2013 மாலை 5.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவரிடமிருந்து எஸ்.எல்.ஆர் துப்பாக்கி ஒன்றும், ரவைக்கூடு ஒன்றும்,27 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் விசேட அததிரடிப்படயினரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது விசேட அதிரடிப்படையினரின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்ட நபருடன் ஆயுத விற்பனை தொடர்பான தொடர்புகளை வைத்து விலைபேசி குறித்த ஆயுதத்தை சம்மாந்துறையில் இருந்து மட்டக்களப்புக்கு எடுத்துவருமாறு கூறியதற்கு அமைய கைது செய்யப்பட்டவர் முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்து செல்லும் வேளையில் தான் இந்த கைது மருதமுனையில் வைத்து இடம் பெற்றுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய சம்மாந்துறை விளினயடியை சேர்ந்தவராவார் .முச்சக்கர வண்டியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
Comments
Post a Comment