நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்

யு.எம் .இஸ்ஹாக் 
நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம் என்ற தலைப்புடன் வெளியாகிய செய்திக்கு கல்முனை மாநகர சபையின் நட்பிட்டிமுனையை சேர்ந்த   எதிகட்சி உறுப்பினர் ஏ.எச்.ஏ.நபார்(ஐ.தே .க )  தரும் விளக்கம் ..................
ஊருக்கும் என்னை ஒரு மாநகர சபை உறுப்பினராக்கிய மக்களுக்கும் என்றும் அடிபணிந்தவன் கட்டுப்பட்டவன்!!!

பிற்போக்குத்தனமான அரசியல் சிந்தனை படைத்த அரசியல் வாதிகளின் நடத்தைகளுக்கு உள்வாங்கப்பட்ட அரசியல் முனைத்தாக்குதலில் விளைவே தவிர என்னைப் பொறுதளவில் இக் கூற்றினை முற்றிலும் மறுக்கின்றேன். ஏனெனில் இவ்விடையம் தொடர்பாக மாத்திரமின்றி அதாவது மைதானம் பொதுச்சந்தை மற்றும் நூலகம் சம்மந்தமான பிரச்சினைகளை மாநகர சபையின் முதலாவது கூட்டத்தொடர் தொடக்கம் கடந்த இரண்டு வருடங்கள் சபையில் எண்ணிறைந்த தடவைகள் பேசப்பட்டும் நூலக பிரச்சினை மாத்திரம் முதலாம் கட்ட வேலை முடிவுற்று திறக்கும் தறுவாயில் இருக்கின்றது. ஆனால் கடந்த வருட மாநகர சபையின் ஒரு கோடி ரூயஅp;பா ஊர்களுக்கான அபிவிருத்தி ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனைக்கு ஏழு இலட்சம் ரூயஅp;பா மாத்திரம் ஒதுக்கீடு செய்தனர்.
 மாநகர சபைக்கு சொந்தமான மைதானம் பற்றி கடந்த காலத்தில் எண்ணிறைந்த தடவைகள் சுற்று மதில் அமைக்க வேண்டும் மைதானத்தை மண்ணிட்டு நிரப்ப வேண்டும் பார்வையாளர் அரங்கினை திறக்கவேண்டும் வீரர்களது பாவனைக்கு விடப்பட வேண்டும் என்று நான் சபையில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு உறையாற்றி ஒரேயொரு விடைதான் கிடைத்தது மாநகர சபையின் கடந்த முதல்வரின் வேண்டுகொளிற்க்கு இணங்க பொறியியளாளரின் பணிப்புரைக்கு அமைய தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பீடு செய்யப்பட்டு மைதானத்தின் வேலைகளை நிறைவேற்றுவதற்க்காக 48இலட்சம் ரூயஅp;பா மாத்திரம் தான் என்று மதிப்பீட்டு முடிவு கிடைத்தது.
இந்த 48இலட்சம் ரூயஅp;பாவினை ஒதுக்கீடு செய்து மாநகர சபைக்கு சொந்தமான மைதானத்தினை அபிவிருத்தி செய்து அழகு பார்க்க முடியாத ஊர்வாதம் பிரதேச வாதம் கட்சி வாதம் கொண்டவர்கள் தான் இச் சபையில் காணப்படுகின்றார்கள். இவ்வாதங்கள் ஒழிக்கப்படுமேயாக இருந்தால் அல்லது தணிக்கப்படுமேயாக இருந்தால் கல்முனை மாநகர் நிச்சயமாக செழிப்புறும். கடந்த நான்கு வருடங்களாக நான் உறுப்பினராக வர முன்னரே இருந்து வெள்ளக் காலங்களில் மைதானத்திற்க்குள் வருகின்ற ஆற்று வாளைகளை (கோவா) அகற்றுவதிலும் மைதானத்தை சீர்செய்வதிலும் ஊர்மக்கள் அறிய எனது சொந்தப்பணத்தினை பயன்படுத்தி சீர்படுத்தியிருக்கிறேன். மாநகர சபையின் உதவிகளைக் கொண்டும் ஒரு சில வேலைகளை செய்திருக்கிறேன். வீராப்பு பேசுவதற்கு நான் இச்சபைக்கு வரவில்லை எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு ஆழும் தரப்பு உறுப்பினர்களினால் செய்யமுடியாத வேலைகளையும் செய்யப்படாத சேவைகளையும் தனி நபர்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் மதவழிபாட்டு நிலையங்களுக்கும் எனது இறைவனறிய எனது சேவைகளை செய்து கொண்டிருக்கிறேன். மீதியாயிருக்கும் எனது ஆயுள் முழுவதும் என்னால் எனது மக்களுக்கும் எனது பிரதேச மக்களுக்கும் இன மத கட்சி பேதமின்றி சேவையாற்ற தயாராக உள்ளேன்.
ஏன் என்றால் ஆக 45நாட்களுக்குள் சிறிலங்கா முஸ்லீம் காங்ரசின் கோட்டையென வர்ணிக்கப்படும் நற்பிட்டிமுனையில் 1600க்கும் அதிகமான மனாப்பைகளை மக்களுடைய ஆணையைப் பெற்று எனது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பரிபூரணமாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். இவ்விடத்தில் ஒரு விடையத்தினை குறிப்பிட வேண்டும் இறுதியாக 'நெல்சிப்'திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி 47இலட்சம் ரூயஅp;பா ஒதுகீட்டில் நற்பிட்டிமுனையின் மூன்று உறுப்பினர்களும் ஒருமித்தவர்களாக நின்று நற்பிட்டிமுனையில் 700மீட்டர் நீளமான நிலத்தொடர்பற்ற பாதைகளை நிர்மாணம் செய்வதற்க்கு கூட மாநகரசபை தயாராகவுள்ளது. அதில் நற்பிட்டிமுனை 2இ3 மற்றும் 5 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பாதைகள் நிர்மாணிக்கப்படவுள்ளது இவ் வேலைத்திட்டத்தின் மூலம் நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரிவில் 90 வீதத்திற்க்கும் அதிகமான பாதைகள் பூரணப்படுத்தப்படவுள்ளது மீதியாகவுள்ள பாதைகளையும் வடிகாண்களையும் எங்களது மாநகர சபை பதவிக்காலம் முடியும் முன்னர் மாநகர சபையின் ஒத்துளைபோடு இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவதற்க்கு தயாராகவுள்ளேன் இவற்றுக்கு எல்லாம் தீர்வாக கல்முனை நியூஸ்  ஊடகத்தில் நவம்பர் 11ம் திகதி வெளியான செய்தியைக் கொண்டு கல்முனை மாநகர சபை ஆணையாளரினை நேரடியாக சந்தித்து இரண்டு

விடயங்களுக்கு தீர்வினை எடுப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
01. மைதானத்தின் பார்வையாளர் அரங்கினையும் அபிவிருத்தியையும் சபையின் ஒத்துளைப்போடு உரிய நபர்களோடு தொடர்பினை ஏற்ப்படுத்தி திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு மைதான அபிவிருத்திகளுக்கான நடவடிக்கைகளை செய்வதோடு அதுவரையில் அவ்விடத்தில் நடைபெறுகின்ற சமூக சீர் கேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்க்காக பொலீசாரின் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கை மேற்கொள்வது என உடனடியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
02. கட்டப்பட்டு நான்கு வருடங்களாகியும் பொதுமக்களின் பாவனைக்கு உத்தியோக பூர்;வமாக வழங்கப்படாத நற்பிட்டிமுனை பொதுச்சந்தை திறந்த கேள்விக் கோரலுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டும் குத்தகைக் கோரல்கள் மக்களால் செய்யப்படாததினால் மாநகரசபையின் ஒத்துளைப்போடு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர் சபை வர்தகர் சங்கம் ஊர் பிரமுகர்களை ஒன்று கூட்டி அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆக நற்பிட்டிமுனை மக்களின் வாக்கினை ஆணையாகப் பெற்று மக்களின் குறைகளையும் மக்களைப் பற்றி சிந்திப்பதற்காகவும் பேசுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் நான் ஒரு கௌரவ உறுப்பினராக இருக்கின்றேனே ஒளிய வீராப்பு பேசி கட்சியை பேசி கதிரையினை அழகுபடுத்துவதற்காக நான் உறுப்பினராக இருக்கவில்லை அப்படியோரு ஆணையை எனது உயிரிலும் மேலான எனது ஆதரவாளர்கள் என்னுடைய அபிமானிகள் பொதுவாக கல்முனை மாநகர மக்கள் எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களிக்கவில்லை.

கௌரவ ஏ.எச்.எச்.எம். நபார்
மாநகர சபை உறுப்பினர்
கல்முனை.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்