Posts

மா. சபைகளின் அதிகாரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

Image
மாகாண சபைகளின் அதிகாரத் தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை என்று உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாகாண சபைகள் திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. மாறாக மாகாண சபை முறையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தரம் 7 இல் புலமைபரிசில் திட்டம்

Image
தரம் 5 இல் நடைபெறும் புலமைபரிசில் பரீட்சையினை தரம் 7 இல் நடத்துவதற்கான திட்டம்மொன்றினை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தரம் 5 இல் புலமைபரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வயதுக்கு அதிகாமான சுமையினை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை டொல்பின் கழகத்தின் ஆண்டு விழா

Image
fy;Kid nlhy;gpd; tpisahl;Lf; fofj;jpd; 26tJ Mz;L epiwtpid Kd;dpl;L ,lk; ngw;w 10f;F 10 nkd;ge;J fpupf;fl; Rw;Wg; Nghl;bapd; ,Wjpg; Nghl;bapy; kl;lf;fsg;G “ ntl;bNtha;]; ” tpisahl;Lf; fofk; 26 Xl;lq;fspdhy; ntw;wpaPl;baJ. Kd;dhs; nlhy;gpd; tpisahl;Lf;fof cWg;gdh; N[k;]; kj;jpA+]; Qhgfhh;j;j Nflaj;Jf;fhf elhj;jg;gl;l ,e;j Rw;Wg; Nghl;bapy; mk;ghiw kw;Wk; kl;lf;fsg;G khtl;lq;fis Nrh;e;j 24mzpfs; fye;J nfhz;lNghJk;> ,Wjpg; Nghl;bf;F kl;lf;fsg;G ntl;bNtha;]; tpisahl;Lf; fofKk; fy;Kid Jsph; tpisahl;Lf; fofKk; njupTnra;ag;gl;ld. Kjypy; JLg;ngLj;jhba ntl;bNtha;]; mzpapdh; 9.4 Xth; Kbtpy; midj;J tpf;fl;Lf;fisAk; ,oe;J 74Xl;lq;fis ngw;wdh;. gjpYf;F JLg;ngLj;jhba Jsph; mzpapdh; 9Xth; Kbtpy; midj;J tpf;fl;Lf;fisAk; ,oe;J 48Xl;lq;fis ngw;wdh;. ,Wjpg; Nghl;bf;F gpujk mjpjpahf r%f Mh;tyh; vk;.fpNwhd;> nfsut mjpjpfshf fy;Kid nghJr; Nritf; fofj;jpd; eph;thfp rpny];bad; n`d;wp MfpNahh; fye;J nfhz;ldh;. Gpujk mjpjpahf fye;J nfhz;l vk;.rpNwhd; ntw;wpf; Nflaj;ij ntw;wpngw;w ntl;bNtha;];...

பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பு

Image
450 கிராம் பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார். கோதுமை மாவின் விலை 8 ரூபா 33 சதத்தால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 92 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த மாதம் 10ம் திகதி பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்திலையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மேலும் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையையும் அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் கோரியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன எமக்குக் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் பெண் தற்கொலை

Image
  கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் 22 வயதுடைய இளம் பெண்னின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது   பொலிவேரியன்  சுனாமி வீடமைப்பு திட்டத்திலேயே இச்சடலம் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாக தெரிய வருகிறது. சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வருடம் 6000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

Image
இந்த வருடம் 6,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 6,728 ஆசிரியர் நியமனங்களில் 3,554 ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 3,000 பேர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துள்ளதாகவும், ஆங்கில மொழியில் 554 பேருக்கு தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கானப் போட்டிப் பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார். தெரிவாகும் நபர்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கல்முனையில் சிறியோர்,முதியோர் விழா

Image
 சர்வ தேச சிறியோர் முதியோர் தின வைபவங்கள் இன்றி கல்முனை இடம் பெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம்

Image
இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது  கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.  இவ் ஆர்ப்பாட்டத்தில், 50 பேர்  அளவிலான  ஒரு குழுவினர்   கலந்துகொண்டனர் . காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி  10.30 வரை ஆர்பாட்டம் நடை பெற்றது. இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பீ. பியசேன,  சமரச முயற்சி எடுத்த  போதிலும் அது கைகூடவில்லை  வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. வைத்திய சாலைக்குள்  அரசியலை நுழைக்க வேண்டாம் .எனவும் அவர் தெரிவித்தார். வைத்திய சாலை சேவைகளை பொறுக்கமுடியாதவர்களின்  காவாலி தனமே இந்த ஆர்பாட்டம் என வைத்திய அத்தியட்சகர் கருது தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில்

Image
 கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட  சேவைகள் இடம் பெற்ற  இந்நிகழ்வில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய ,கல்முனை அஸ்ரப் ஞாப கார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் எ.எல்.எப்.ரகுமான்,அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன் பரிசோதகர் எ.எல்.எம்.பாரூக் ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.எம்.மென்டிஸ்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா  ஆகியோர் கலந்து கொண்டனர். Mr.Ranjith veera sooriya (Amparai D.I.G) அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய இரத்த தானம் வழங்கி பொலிஸ் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

சிறைக்கூட பொறுப்பதிகாரி இடை நிறுத்தம்

கல்முனை சிறைக்கூடத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஒருவர் வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிறைக்கூட உத்தியோகத்தர்கள் மூவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளருக்கு இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் பி.ஆர்.டி.சில்வா அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2ஆம் திகதி மாலை அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு கைதிகள் இருவரை கொண்டு சென்று தனியார் வான் ஒன்றில் கல்முனை சிறைக்கூடத்துக்கு கொண்டுவரும் வழியில் இரு கைதிகள் அட்டாளச்சேனை,பாலமுனை பள்ளிவாயலுக்கு அருகில் விலங்குகளுடன் தப்பிச்சென்றனர். இதன்போது குறித்த கைதியை நீதிமன்றுக்கு கல்முனை சிறைக்கூடத்தில் இருந்து ஒரு பொறுப்பதிகாரி உட்பட நால்வர் குறித்த கைதிகளுடன் சென்றிருந்தனர். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த கைதிகளை கொண்டு சென்றவர்களில் ஒருவரான பொறுப்பதிகாரிக்கு காலவரையறையின்றி வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரும் வரை ஏனைய மூன்று சிறைக்கூட உத்தியோகத்தர்களுக்கும் உடனடியாக அமுலுக்கு ...

பாண்டவர் வரலாறு கூறும் தீப்பள்ளயம் உற்சவம் இன்று தீ மிதிப்புடன் நிறைவு

Image
மகா பாரதக் கதையின் கதாநாயகி யான திரெளபதை அம்மனுக்கு இலங்கையில் அமைக்கப்பட்ட ஆலயங்களில் கல்முனைக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்திலுள்ள பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயம் முதன்மையும் முக்கியத் துவமும் பெற்றுள்ளது. அன்னையின் அருளால் நோய் பிணி தீர்ந்தவர் களும் பட்டம், பதவி பெற்றவர் களும் திருமணம், குழந்தைச் செல்வம் முதலான இஷ்ட் சித்திகளை பெற்றவர்களுமான அடியார்கள் அன்னையின் அற்புதம் பற்றிக் கூறுவர். இவ்வாலயத்தின் வருடாந்தப் பெருவிழா செம்டம்பர் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தீமிதிப்புடன் நிறைவுறுவதற்கு அம்மனின் அருள் கிடைத்துள்ளது.

தமிழ் பிரிவில் கல்முனை மாணவி முதலிடம்

Image
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று கல்முனை தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். கல்முனை நியூஸ் இணைய தளம் சுபதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது

கல்முனையில் இன்று வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்

Image
கல்முனையில்  வாகன விபத்து  ஒருவர் பலி இருவர் படு காயம்  இச்சம்பவம் இன்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது .உளவு இயந்திர விபத்தின் போதே  17 வயதுடைய நற்பிட்டிமுனை முகம்மது நாபி முகம்மது அரசத்  என்பவர் மரணமாகி உள்ளார்  மரணிதவரின் தந்தையே  குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிசார்  தெரிவிக்கின்ற்றனர்.

சட்ட விரோத மண் அகழ்வோர் கல்முனையில் கைது

Image
சட்ட விரோத மாக  மண் அகழ்வோர் கல்முனையில் கைது  செயப் படுகின்றனர் . இவ்வாறு மண் அகழ்வில் ஈடு பட்ட  சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கல்முனை பொலிசாரினால் கைது செயபபட்டு  நேற்று நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டதன் பின்னர் சந்தம் வழங்கப் பட்டு விடு தலை செயப்பட்டுள்ளனர்.

கல்முனையில் சட்ட விரோதமாக மீன்பிடித்தவர் கைது

Image
கல்முனைக்குடி பகுதியில் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மீன்பிடிப்பதற்காக அவர் பயன்படுத்திய டைனமைட், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு குண்டுகள், விசப்படகு மற்றும் 350 கிலோ கிராம் மீன் உள்ளிட்டவை இவரிடமிருந்து  பறி முதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த சந்தேகநபருடன் இணைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் மூவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன

Image
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட  பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன . இந்த வீட்டுத்திட்டம் நாவிதன் வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாலாம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டுதிட்டத்தில் குடி நீர்,மின்சாரம் இல்லை என்றாலும் வீடில்லதவர்களுக்கு இவ் வீடுகள் வழங்கப்படவில்லை என்ற குற்ற சாட்டு பரவலாக பேசப்படுகின்றது. வீட்டுத் திட்டத்தில்   குடியமர்த்த பட்டவர்கள் மருதமுனை,கல்முனைக்குடி,சாய்ந்தமருது பிர்தேசதவர்களாகும் . இவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் வசித்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிப்பு

Image
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று (19-09-2010) மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.  கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் துக்கதினம் அனுஸ்டிக்குhறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

திருகோணமலையில் மாகாண ஆளுநர்களின் 13 ஆவது தேசிய மாநாடு

Image
மாகாண ஆளுநர்களின் 13 ஆவது தேசிய மாநாடு திருகோணமலையில் இன்று ஆரம்பமானது. நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்களில் சிலரான விமலதீர திஸநாயக்க, எம்.எஸ்.சுபைர், துரையப்பா நவரட்ணராஜா, கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம்.பாயிஸ் மற்றும் பிரதித் தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ரஞ்சித் சில்வா, மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து

புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில்

Image
தரம் 05 புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகின்றன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இப்பரீட்சை கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. 2744 பரீட்சை நிலையங்களில் 316,000 மாணவர்கள் தோற்றி இருக்கின்றார்கள். விடைத் தாள்களைத் திருத்தும் பணிகள் கடந்த 04 ஆம் திகதி ஆரம்பமாகி நிறைவடைந்து விட்டன என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

Image
மட்டக்களப்பு கரடியனாறு இன்று காலை 11.30 அளவில் ஜும்மாஹ் தொழுகைக்கு சற்று முன்னர் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் களஞ்சியப் படுத்தி வைக்கபட்டிருந்த சீனா கட்டிட நிர்மான பணியாளர்களின் வெடிமருந்துகள் வெடித்ததில்  62 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போலிஸ் நிலையம், அதிரடி படை முகாம், கமநல சேவைகள் நிலையம் என்பனவும் முற்றாக சேதமடைந்துள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிழந்தவர்களில் இரண்டு சீன பிரஜைகளும் ஏராவூரை சேர்ந்த ஐயூப் கான் என்ற பொலிஸ் உத்தியோகர்தவரும் அடங்குவதாகவும் அறிய முடிகின்றது பிந்திய செய்தி சற்று முன்னர் வரையும் 27 உடல்கள் மாத்திரம் சிதைந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படங்களை பார்க்க

மருதமுனையில் இலவச கத்னா வைபவம்

Image
மருதமுனை மானியங்கள் சேவைகளுக்கான வாரியத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பரீஸ் பேக்கரி நிறுவனத்தின் அனுசரணையில் 31 வறிய சிறுவர்களுக்கு இலவச கத்னா வைபவம்  இன்று வெள்ளிக்கிழமை மருதமுனை மத்திய வைத்திய சாலையில் நடை பெற்றது. அக்கரைபற்று ஆதார வைத்திய சாலை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ்.எஸ்.ஜெமீல் வழி  காட்டலில் சிறப்பாக இடம்பெற்றது.

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று

Image
மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது  ஆண்டு நினைவு தினம் இன்று கல்முனையில்  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  தலைமையில் இடம் பெற்றது. அஸ்ரப் அழியா பொக்கிஷம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார். இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான்  பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சம...

நேரப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள்

Image
கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் நேரப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.டி .ஏ. நிஸாம்  தெரிவித்தார். அரச அலுவலகங்களுக்கு நேரத்திற்கு ஊழியர்களை வருகை தருவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ் இயந்திரங்கள் பொருத்தப்படுவதாகவும், இவ் இயந்திரங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் பொருத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இம் மாகாணத்திலுள்ள 15 வலயக்கல்வி அலுவலகங்களில் இவ் இயந்திரங்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலில் மூழ்கி மாணவர் மறைவு .

Image
கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்புக் கடலில் மூழ்கி மாணவர் ஒருவன் ஞாயிறு காலை காணாமல் போயுள்ளார். இவரது சடலத்தைக் கண்டுபிடிக்க சுழியோடிகள் நேற்றுக் காலையிலிருந்து தேடுதலில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர். மூன்று நண்பர்களுடன் இவர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோதே இவரை அலை இழுத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது. பாண்டிருப்பைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி குமுதினி துரைரட்ணத்தின் ஏக புதல்வன் அனோஜன் (வயது 17) என்பவரே கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றவேளையில் இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. எஞ்சிய மூவரும் வந்து தகவலைத் தெரிவித்துள்ளனர். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி உயர்வகுப்பு மாணவனான அனோஜனுக்கு ஒரேயொரு சகோதரி (வைத்தியபீடம்) உள்ளார். தந்தையார் பற்றிமாக்கல்லூரியின் இரசாயனவியல் உயர்தர ஆசிரியராவார்.

கல்முனை வாகன விபத்தில் ஒரு இளைஞன் மரணம் , மூவர் காயம்!

Image
அம்பாறை மாவட்டம் கல்முனையில் நோன்பு பெருநாள் தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். அதிகாலை ஒரு மணியளவில் கல்முனைக்குடி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகாமை யில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வருகின்றது . மாளிகைக்காட்டிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார் . மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.எம். ஹனீபா நியாஸ் வயது 18 என்பவரே கொல்லப்பட்டவராவார். காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நான்கு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது