கடலில் மூழ்கி மாணவர் மறைவு .
இவரது சடலத்தைக் கண்டுபிடிக்க சுழியோடிகள் நேற்றுக் காலையிலிருந்து தேடுதலில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர்.
மூன்று நண்பர்களுடன் இவர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோதே இவரை அலை இழுத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது. பாண்டிருப்பைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி குமுதினி துரைரட்ணத்தின் ஏக புதல்வன் அனோஜன் (வயது 17) என்பவரே கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
நேற்று தனது நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றவேளையில் இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. எஞ்சிய மூவரும் வந்து தகவலைத் தெரிவித்துள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி உயர்வகுப்பு மாணவனான அனோஜனுக்கு ஒரேயொரு சகோதரி (வைத்தியபீடம்) உள்ளார்.
தந்தையார் பற்றிமாக்கல்லூரியின் இரசாயனவியல் உயர்தர ஆசிரியராவார்.
Comments
Post a Comment