மா. சபைகளின் அதிகாரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
மாகாண சபைகளின் அதிகாரத் தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை என்று உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகாண சபைகள் திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. மாறாக மாகாண சபை முறையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
Comments
Post a Comment