இவ்வருடம் 6000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

இவ்வருடம் 6000 பேருக்கு ஆசிரியர் நியமனம்
இந்த வருடம் 6,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 6,728 ஆசிரியர் நியமனங்களில் 3,554 ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

3,000 பேர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துள்ளதாகவும், ஆங்கில மொழியில் 554 பேருக்கு தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கானப் போட்டிப் பரீட்சை எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார். தெரிவாகும் நபர்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்