சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் பெண் தற்கொலை

சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் பெண்னின் சடலம் மீட்பு

 

கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் 22 வயதுடைய இளம் பெண்னின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது   பொலிவேரியன்  சுனாமி வீடமைப்பு திட்டத்திலேயே இச்சடலம் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாக தெரிய வருகிறது.

சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்