சிறைக்கூட பொறுப்பதிகாரி இடை நிறுத்தம்


கல்முனை சிறைக்கூடத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஒருவர் வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிறைக்கூட உத்தியோகத்தர்கள் மூவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளருக்கு இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் பி.ஆர்.டி.சில்வா அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 2ஆம் திகதி மாலை அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு கைதிகள் இருவரை கொண்டு சென்று தனியார் வான் ஒன்றில் கல்முனை சிறைக்கூடத்துக்கு கொண்டுவரும் வழியில் இரு கைதிகள் அட்டாளச்சேனை,பாலமுனை பள்ளிவாயலுக்கு அருகில் விலங்குகளுடன் தப்பிச்சென்றனர்.

இதன்போது குறித்த கைதியை நீதிமன்றுக்கு கல்முனை சிறைக்கூடத்தில் இருந்து ஒரு பொறுப்பதிகாரி உட்பட நால்வர் குறித்த கைதிகளுடன் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த கைதிகளை கொண்டு சென்றவர்களில் ஒருவரான பொறுப்பதிகாரிக்கு காலவரையறையின்றி வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரும் வரை ஏனைய மூன்று சிறைக்கூட உத்தியோகத்தர்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மட்டக்களப்பு சிறைக்கூடத்துக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்