பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பு


450 கிராம் பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை 8 ரூபா 33 சதத்தால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 92 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் 10ம் திகதி பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்திலையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மேலும் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையையும் அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் கோரியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன எமக்குக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு