கல்முனைக்குடி பகுதியில் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில்
ஈடுபட்ட கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மீன்பிடிப்பதற்காக அவர் பயன்படுத்திய டைனமைட், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
இரு குண்டுகள், விசப்படகு மற்றும் 350 கிலோ கிராம் மீன் உள்ளிட்டவை
இவரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சந்தேகநபருடன் இணைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட
மேலும் மூவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன்
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Comments
Post a Comment