கல்முனை வாகன விபத்தில் ஒரு இளைஞன் மரணம் , மூவர் காயம்!
அம்பாறை
மாவட்டம் கல்முனையில் நோன்பு பெருநாள் தினம் இடம்பெற்ற
வாகன விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். அதிகாலை
ஒரு மணியளவில் கல்முனைக்குடி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகாமை
யில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வருகின்றது .
மாளிகைக்காட்டிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து
கொண்டிருந்த இளைஞர்கள் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியதில்
ஒருவர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார் . மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.எம்.
ஹனீபா நியாஸ் வயது 18 என்பவரே கொல்லப்பட்டவராவார். காயமடைந்த ஏனைய மூன்று
இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நான்கு
இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது