Posts

Showing posts from July, 2012

வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான அத்தனை சதி முயற்சிகளையும் தோற்கடிப்போம்!

Image
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் இப்தார் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களையும் அக்கரைப்பற்று மக்கள் ஆதரிப்பது எனவும் அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இப்தார் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரி.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சுபைர் ஹாஜியார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளேனம், அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பின்வரும் நான்கு தீர்மா...

மருதமுனை கடற்கரை முன்றலில் குப்பைத் தொட்டிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது

Image
மருதமுனை கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் மக்கள் பாவனைக்காக நேற்று வெள்ளிக்கிழமை (20.07.2012) மாலை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் திறந்துவைக்கப்பட்டது. அதிகமான கல்முனை மாநகர வாழ் மக்கள் தங்களின் ஒய்வு நேரங்களை உல்லாசமாக கழிப்பதற்கு மேற்குறித்த கடற்கரைக்கு வருவது வழக்கமாக காணப்படுகிறது. இதனால் இங்கு இடப்படுகின்ற கழிவுப்பொருட்களினால் சூழல் மாசுபடுவதனை மருதமுனை ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தினர் கல்முனை மாநகர முதல்வரிடம் தெரிவித்தமைக்கு அமையவே குறித்த குப்பைத் தொட்டிகளை மருதமுனை கடற்கரை முன்றலின் வீதி ஓரத்தில் கல்முனை மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டது. ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தின் தலைவரும் சத்திரசிகிச்சை நிபுனருமான எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.ஏ.எம். றகீப், இஸட்.ஏ.எம்.றகுமான், கணக்காலர் எல்.ரீ.சாலிதீன், ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கு மாநகர சபை உறுப்பினர் பறக்கதுள்ளாஹ் நிதி ஒதுக்கீடு!

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கதுள்ளாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கு கடினபந்து ஆடுகள விரிப்பு கையளிக்கும் முகமாக கல்முனை றினோன் மற்றும் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகங்களுக்கிடையே சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், கல்முனை கிரிக்கெட் கவுன்ஸில் செயலாளர் ஏ.வி.எம். பைஸால் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற ஜிம்கானா வி.கழகத்திற்கு முறையே வெற்றிக்கேடயத்தையும், போட்டியின் சிறப்பாட்டக்காறருக்கான கிண்ணத்தையும் வழங்குவதையும் இரு அணிவீராகளையும் காணலாம்.

தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27,28 இல்

Image
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27, 28 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1433 றமழான் தலை பிறை தென்பட்டது

Image
ஹிஜ்ரி 1433 றமழான் தலை பிறை சவூதி அரேபியாவில் தென்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்நது நாளை 20.07.2012 தொடக்கம் நோன்பு ஆரம்பிக்கிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள: fatwa-online.com

அம்பாறையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விபரம்

(இஸ்ஹாக் ) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் விபரம் பின்வருமாறு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1.   எம்.ஏ. அப்துல் மஜீத்  2.   கே.எம். அப்துல் ஜவாத்  3.   ஏ. முகம்மட் ஜெமீல்  4.   ஏ.எல். முஹம்மட் நஸீர்  5.   ஏ.எல்.தவம்) 6.   எம்.ஐ.எம்.மன்சுர்  7.   ஐ.எல்.எம்.மாஹீர்  8.   ஏ.ஏ.முகம்மட் பஷீர் 9.   எம்.என்.முகம்மட் நபீல்  10. எஸ்.எல்.முகம்மட் பளீல்  11. ஏ.எல்.அப்துல் நசார்  12. எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர்  13. டி.எம். ரனவீர பன்டா 14. பி.எம். ஆனந்த பிரேமலால். 15. ஏ.ஜே. அலி முகம்மட் தம்பி  16. எம்.எல்.துர்ஹர் நயீம் (துல்சான்)  17. அப்துல் றஹ்மான் அமீர்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1.   விமலவீர திசாநாயக்க  2.   எம்.எஸ்.உதுமாலெவ்பை  3.   எஸ்.செல்வராசா 4.   எஸ். புஷ்பராஜா  5.   கே. புஷ்பகுமார் 6. ...

இந்த சிரிப்பின் அர்த்தம் என்னவோ?

Image
இன்று நன்பகள் 12 மணியுடன் 3 மாகாண சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கள் செய்யும் கால எல்லை நிறைவடைகிறது. இதன்காரணமாக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாமலிருந்த பல அரசியல் கட்சிகள் தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கள் செய்தன. அந்த வகையில் இன்று மட்டக்களப்பு தேர்தல்கள் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தவிசாளர், செயலாளர் நாயகம் ஆகியோருடன் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரலீதரன் சிரித்து மகிழும் காட்சி எமது கமராவில் பதிவானபோது...

ஸ்ரீ.ல.மு.கா. இற்கு ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கவில்லை: ஜனாதிபதியின் பேச்சாளர்

Image
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தனது  ஆசீர்வாதத்தை வழங்கவில்லையென ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.  கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக நேற்று தீர்மானம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Image
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் என்று அழைக்கப்படும் சட்டத்தரணி துல்கர் நயீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று வியாழக்கிழமை இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். இதனால், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் துல்ஷான் இன்று கையொழுத்திட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் ஸ்ரீ.ல.மு.கா அரசுடன் இணையும்!

Image
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகளின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மீண்டும் இணைந்துகொள்ளும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக பின்னர் அறிவித்தது. இலங்கை ஒரு ஜனாநாயக நாடு. அரசியல் கட்சிகள் சுயவிருப்பத்தில் இயங்கக்கூடிய ஜனாநாயக உரிமை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சி ஒன்று தேர்தலில் தனித்துப் போடடியிடுவது இது முதல் முறையல்ல. ஆனால் தேர்தல் வெற்றியின்பின்னர் ஸ்ர...

முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் அஸாத் சாலி போட்டி

Image
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் மடட்க்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ஹபீஸ் நஷீர் அஹமட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் 15 வது வருடாந்த பொது கூட்டம்!

Image
தென் கிழக்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் 15 வது வருடாந்த பொது கூட்டம் பல்கலைகழக கலை பீட கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் SMM. இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், பதிவாளர் H. அப்துல் சத்தார், நிதியாளர் A. குலாம் ரஷீத் ஆகியோர் கௌரவ அதீதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல்

Image
கிழக்கு மாகான சபை தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன . இதே வேளை  24சுயே ட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்முனை தொகுதி சாய்ந்தமருதில் இருந்து இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இன்று செலுத்தியுள்ளனர். நாளை பிரதான அரசியல் கட்சியான ,UNP,SLMC,TNA ,ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி தேசிய காங்கிரஸ்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட PA  வேட்பு  மனு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகதாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர்.

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் இனக்கத்தோடு கிழக்கு மாகாணத்தில் தணித்து மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது இன்று (18) காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்  தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முன்ணிலையில் கிழக்கின் மூன்று மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வின்னப்தில் கைச்சாத்திடுவதை காணலாம் . அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று புதன்கிழமை இணைந்துகொண்டுள்ளார்.

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் தேசிய காங்கிரஸ் - அம்பாறை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் -  மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்;பாளர்களும் அம்பாறை மாவட்த்தில் ஒரு வேட்பாளர்களும...

நடந்தது என்ன ?

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒப்பந்த அடிப்படையில் அரசுடன் முகா இணைந்து போட்டி மத்திய அரசிலிருந்து விலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது-அமைச்சர் ஹக்கீம் கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காஸிம்; விசேட ஹெலிகொப்டரில் கொழும்பு பறந்தார்! முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தே போட்டியிடும்: அமைச்சர் பஷில் அரசாங்கத்தோடு இணைந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும்: ஹகீம் அரசுடன் இணைந்தே போட்டி;மு.கா.உயர்பீடம் மீண்டும் உறுதியான தீர்மானம் : ஹசனலி  முஸ்லிம் காங்கிரசில் பிளவா? அடியோடு மறுக்கிறார் மு.கா. இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் : ஜெமீல்! கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி: அமைச்சர் ஹக்கீம்

ஐ.ம.சு.மு யின் வேட்புமனுப்பத்திரத்தில் TMVP கையொப்பமிட்டது.

Image
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணத்திற்கான வேட்பு மனுவில் ரிஎம்விபி எனப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் கையொப்பமிட்டதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலான கல்முனை நியூஸ் இணையத்திற்கு  தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுநத்திர முன்னணியில் தமது கட்சியை சேர்ந்த 12 பேர் கிழக்கு மாகாணத்தில் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் தலைமையில் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன், நாகலிங்கம் ஜெயம், மோகன், பிரசாந்தன், பிரதீப் மாஸ்டர், சிறிதரன் என்கின்ற 6 பேரும் திருமலை மாவட்டத்தில் நவரட்ணராஜா, நளினிகாந்தன் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட ரகு வின் சகோதரன்) செந்தூரன் என்கின்ற மூவரும், அம்பாறை மாவட்டத்தில் புஸ்பராஜா , செல்வராஜா , இனியபாரதி என்கின்ற மூவரும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.  கிழக்கு மாணத்தில் ஐ.ம.சு.மு சார்பில் தமது கட்சியின் தலைவரே தலைமைவேட்பாளராக பெ...

கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி: அமைச்சர் ஹக்கீம்

Image
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் - கல்முனை நியூஸ்  இணையதளத்திற்கு தெரிவித்தார். இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, மரம் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான முறையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும்  அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.  இந்த அறிவிப்பை அடுத்து எம்.பீ க்கள்  சிலர்  அரசுடன் இணையலாம் என தெரிய வருகிறது 

கொழும்பு MMC பதவியை தூக்கி எறிந்து விட்டு கிழக்கு தேர்தலில் குதிக்கிறார் அசாத் சாலி!

Image
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அசாத் சாலி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார். இன்று தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்கள் முன்னணி எனும் அமைப்பை உருவாக்கி எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக் அவர் மேலும் தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது என்று உலமா சபையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை உதாசீனம் செய்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்தே தான் இத்தேர்தலில் களமிறங்க தீர்மானித்ததாக அசாத் சாலி தெரிவித்தார்.

நிருவாகச் சேவையின் போட்டிப் பரீட்சை

Image
இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2010 (2012) மற்றும்   இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2011 (2012)     ஆகிய இரு சாராருக்கான பரீட்சைகளும் ஜுலை 21ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெறும் .  கொழும்பில் மட்டுமே நடைபெறவிருக்கும் இப்பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களும் நேர அட்டவணைகளும்  உரிய விண்ணப்பதாரிகளுக்கு   அவர்களது முகவரிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்தார்.  அவ்வாறே இலங்கை கணக்காய்வு  சேவையின் 11ஆம் வகுப்பின் 11ஆம் தரத்துக்கு கணக்காய்வு  அத்தியட்சகர்களைச் சேர்ப்பதற்காக   கணக்காய்வாளர் தலைமை அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்காக நடாத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையும் இதே   தினங்களில் கொழும்பில் நடைபெறும்.  எனவே இந்த பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கு தமது  அனுமதிப் பத்திரங்...

ரமழான் தலைப்பிறை மாநாடு

Image
ரமழான் மாத தலைப்பிறை தொடர்பாக தீர்மானிப்பதற்கான மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எதிர்வரும் 20 ஆம் திகதி மஃரிப் தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமாகும். இம் மாநாட்டில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களப் பிரமுகர்கள், உலமாக்கள் ஆகியோரும் பங்கு பற்றுவர். இதேவேளை றமழான் தலைப் பிறையைக் கண்டால் தகுந்த ஆதாரங் களுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கலாம்.

முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறைக்காக நாளை மூடப்படும்

Image
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தபின் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக நாளை செவ்வாய்க்கிழமை 17ம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரட்ண அறிவித்துள்ளார். இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 22ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஆகஸ்ட் 03ம் திகதி மூடப்பட்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக செப்டம்பர் 03ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார். இதேவேளை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 26ம் திகதி இடம்பெறுமெனவும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 06ம் திகதி ஆரம்பமாகுமெனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜயந்த புஸ்பகுமார அறிவித் துள்ளார்.

அரச ஊழியர்கள் சேவை நீடிப்பு கோராமல் 60 வயது வரை வேலைசெய்ய முடியும்.

Image
அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவி க்கப்படுகின்றது. தற்போது அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆகவுள்ள போதிலும 60 வயது வரை சேவை நீடிப்பை பெற்றுக்கொள்ளலாம் எனினும், 57 வயதுக்குப் பின்னர் ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும்.  இந்நிலையில் புதிய திட்டத்தின் படி, அரச ஊழியர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சரும் நானே!

Image
சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகங்களுக்கு பேட்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும். நாம் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதும் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்பதும் ந}ற்றுக்கு நூறு வீதம் உறுதியானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடடர்பில் தகவல்கள் சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாயர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாண சபையின்;;;;;;; முதலாவது முதலமைச்சராக 2008 ஆம் ஆண்டு நான் பொறுப் பேற்ற போது கிழக்கு மாகாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. விரக்தியடைந்த நிலையில் எதிர்;;;கால வாழ்வில் நம்பிக்கையிழந்தவர்காக- பலவித முரண்பாட்டுச் சிந்தனைகளுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அந்த மக்களுக்கு நம்பிக்கையூ+ட்டி இனங்களுக்கிடையிலான நல்லினக்கத்தை மக்கள் மனங்களி...

கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காஸிம்; விசேட ஹெலிகொப்டரில் கொழும்பு பறந்தார்!

Image
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் அவர்களை களமிறக்குவதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகிறது.. நாளை திங்கட்கிழமை கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ள கட்சியின் அதியுயர் பீட கூட்டத்த்தின்போது இது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்று அறிவிக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பைசால் காசீம் இராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் முதலமைச்சர் பதவி உத்தரவாதப்படுத்தப்பட்டால் மாத்திரமே தான் iநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இம்மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க முடியும் என்று பைசால் காசீம் எம்.பி. முன்னதாக தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று அம்பாறையில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இடம்பெற்ற தியட்ட கிருள திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் தனது சொந்த ஊரான நிந்தவூரில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பை...

மத்திய அரசிலிருந்து விலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது-அமைச்சர் ஹக்கீம்

Image
மத்திய அரசிலிருந்துவிலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு அறவே கிடையாது என குறிப்பிட்டுள்ள நீதியமைச்சரும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்,  மத்திய அரசில் இருந்து கொண்டே கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நம்பிக்கைதெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாதர் அமைப்பின் சிங்களப் பிரிவொன்றை அம்பாறை மாவட்டத்தில்,தெஹியத்தகண்டியவில் வியாழக்கிழமை அங்குள்ள சாலிகா மண்டபத்தில்  அங்குரார்ப்பணம்செய்து வைத்து, உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் மஜீத் (முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்) ஜவாத் (ரஸாக்) ஆகியோரும் கலந்து கொண்டனர். அப் பிரதேசத்தில்உள்ள கண் பார்வை குறைந்தோருக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் அப்பொழுது இடம்பெற்றது. அமைச்சர் ஹக்கீம் அவ்வைபவத்தில் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்தாவது, ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ம...