தேர்தல் வெற்றியின் பின்னர் ஸ்ரீ.ல.மு.கா அரசுடன் இணையும்!


எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகளின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மீண்டும் இணைந்துகொள்ளும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக பின்னர் அறிவித்தது.
இலங்கை ஒரு ஜனாநாயக நாடு. அரசியல் கட்சிகள் சுயவிருப்பத்தில் இயங்கக்கூடிய ஜனாநாயக உரிமை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சி ஒன்று தேர்தலில் தனித்துப் போடடியிடுவது இது முதல் முறையல்ல.
ஆனால் தேர்தல் வெற்றியின்பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடுகளை வெளிப்படையாக அறிவிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்