மருதமுனை கடற்கரை முன்றலில் குப்பைத் தொட்டிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது


மருதமுனை கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் மக்கள் பாவனைக்காக நேற்று வெள்ளிக்கிழமை (20.07.2012) மாலை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் திறந்துவைக்கப்பட்டது.
அதிகமான கல்முனை மாநகர வாழ் மக்கள் தங்களின் ஒய்வு நேரங்களை உல்லாசமாக கழிப்பதற்கு மேற்குறித்த கடற்கரைக்கு வருவது வழக்கமாக காணப்படுகிறது. இதனால் இங்கு இடப்படுகின்ற கழிவுப்பொருட்களினால் சூழல் மாசுபடுவதனை மருதமுனை ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தினர் கல்முனை மாநகர முதல்வரிடம் தெரிவித்தமைக்கு அமையவே குறித்த குப்பைத் தொட்டிகளை மருதமுனை கடற்கரை முன்றலின் வீதி ஓரத்தில் கல்முனை மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டது.
ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தின் தலைவரும் சத்திரசிகிச்சை நிபுனருமான எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.ஏ.எம். றகீப், இஸட்.ஏ.எம்.றகுமான், கணக்காலர் எல்.ரீ.சாலிதீன், ஆகாஸ் சமூகசேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது