ரமழான் தலைப்பிறை மாநாடு
ரமழான் மாத தலைப்பிறை தொடர்பாக தீர்மானிப்பதற்கான மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எதிர்வரும் 20 ஆம் திகதி மஃரிப் தொழுகைக்குப் பின்னர் ஆரம்பமாகும்.
இம் மாநாட்டில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களப் பிரமுகர்கள், உலமாக்கள் ஆகியோரும் பங்கு பற்றுவர்.
இதேவேளை றமழான் தலைப் பிறையைக் கண்டால் தகுந்த ஆதாரங் களுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கலாம்.
Comments
Post a Comment