கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளராக பைசால் காஸிம்; விசேட ஹெலிகொப்டரில் கொழும்பு பறந்தார்!


நாளை திங்கட்கிழமை கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ள கட்சியின் அதியுயர் பீட கூட்டத்த்தின்போது இது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்று அறிவிக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பைசால் காசீம் இராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் முதலமைச்சர் பதவி உத்தரவாதப்படுத்தப்பட்டால் மாத்திரமே தான் iநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இம்மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க முடியும் என்று பைசால் காசீம் எம்.பி. முன்னதாக தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று அம்பாறையில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இடம்பெற்ற தியட்ட கிருள திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் தனது சொந்த ஊரான நிந்தவூரில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அவசர அழைப்பினை ஏற்று இன்று பிற்பகல் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு சென்றுள்ளார்.
பெரும்பாலும் இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான ஏ.எம்.மன்சூர், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது