கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் - கல்முனை நியூஸ்  இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, மரம் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான முறையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும்  அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார். 
இந்த அறிவிப்பை அடுத்து எம்.பீ க்கள்  சிலர்  அரசுடன் இணையலாம் என தெரிய வருகிறது 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்