நிருவாகச் சேவையின் போட்டிப் பரீட்சை

இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2010 (2012) மற்றும்   இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2011 (2012)     ஆகிய இரு சாராருக்கான பரீட்சைகளும் ஜுலை 21ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெறும் . 

கொழும்பில் மட்டுமே நடைபெறவிருக்கும் இப்பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களும் நேர அட்டவணைகளும்  உரிய விண்ணப்பதாரிகளுக்கு   அவர்களது முகவரிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்தார். 

அவ்வாறே இலங்கை கணக்காய்வு  சேவையின் 11ஆம் வகுப்பின் 11ஆம் தரத்துக்கு கணக்காய்வு  அத்தியட்சகர்களைச் சேர்ப்பதற்காக   கணக்காய்வாளர் தலைமை அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்காக நடாத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையும் இதே   தினங்களில் கொழும்பில் நடைபெறும். 

எனவே இந்த பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கு தமது  அனுமதிப் பத்திரங்களும் நேர அட்டவணைகளும்  கிடைக்கா விடில் தமது   முழுப்பெயர் முகவரிகளுடன் பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு -வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை   ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுக்கிறார்.  

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்-  011-2785230   011-2177075 -

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்