முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் என்று அழைக்கப்படும் சட்டத்தரணி துல்கர் நயீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று வியாழக்கிழமை இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இதனால், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்ஷான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் துல்ஷான் இன்று கையொழுத்திட்டுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment