கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சரும் நானே!
சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகங்களுக்கு பேட்டி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும். நாம் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதும் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்பதும் ந}ற்றுக்கு நூறு வீதம் உறுதியானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடடர்பில் தகவல்கள் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாயர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாண சபையின்;;;;;;; முதலாவது முதலமைச்சராக 2008 ஆம் ஆண்டு நான் பொறுப் பேற்ற போது கிழக்கு மாகாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.
விரக்தியடைந்த நிலையில் எதிர்;;;கால வாழ்வில் நம்பிக்கையிழந்தவர்காக- பலவித முரண்பாட்டுச் சிந்தனைகளுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அந்த மக்களுக்கு நம்பிக்கையூ+ட்டி இனங்களுக்கிடையிலான நல்லினக்கத்தை மக்கள் மனங்களில் விதைத்து உழைப்பின் மூலம் உயரக்கூடிய ஒரு அமைதியான சூழலை நாம் ஏற்படுத்தினோம்.
அதன் பின்னர் வெளிநாட்டு உதவிகள் பெற்று எமது கிழக்கு மாகாணத்தின் அடிப்படை வசதிளை படிப்படி யாகக் கட்டியெழுப்பினோம்.
அதன் கராணமாக கிழக்கு மாகாணம் உற்பத்தி;த்துறையில் படிப்படி யாக முன்னேற்றம் கண்டது.
நெல் உற்பத்தி- பால் உற்பத்தி மற்றும் தானிய உற்பத்தியிலும் நாம் துரித முன்னேற்றம் அடைந்தோம்.
நான்;;;;;;;;;;;; முதலமைச்சரான காலத்தில் எமது மாகாணம் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியிருந்தது. கல்வித்துறையில் நாம் பாரிய மாற்றங்கள் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியதன் காரணமாக இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை யாரும் காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ்ப் பகுதிகளில் இரண்டு கல்வி வளையங்களை நாம் அமைத்துள்ளோம். அத்துடன் மீன்பிடி அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறையையும் முன்னேற்றியுள்ளோம். இதன் காரணமாக பல பொருளாதார நன்மைகளை எமது கிழக்கு மாகாணம் பெற்றுள்ளது.
யுத்தம் காரணமாக எமது பகுதி பொருhதாரத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இப்போம்கூட அதிக மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 43 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மக்களுக் தேவைப்படுகின்றது.
இன்னும் இப்பிரதேசத்தில் உள்ள மணல் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவேண்டிய தேவை இருக்கின்றது.
இது தவிர கல்வித்துறையிலும் சிறு சிறு பிரட்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பது எவ்வாறு என மக்கள் தௌpவாகச் சிந்தி;க்க வேண்டும்.
இவ்வாறான தேவைகளை எமக்கு நிறைவேற்றித் தருபவர் யார்? யாரால் இதனை நிறைவேற்ற முடியூம்? மக்கள் மீதும் இந்த மண்ணின் மீதும் பற்று யாரிடம் இருக்கின்றது?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை மக்கள் ஆழமாகச் சிந்தித்தால்- அவற்றையெல்லாம் தமிழ் மக்களுக்குச் செய்து தரக்கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது மிகத் தௌpவாக விளங்கும்.
எனவேதான் இப்பிரதேச மக்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பது ந}ற்றுக்கு நூறு உறுதியானது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வரவேண்டும்-தமிழ் முதலமைச்சர் வரவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்பன போன்ற பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தனித்;; தரப்பாக போட்டியிடும் எவரும் கிழக்கில் வெற்றிபெற முடியாது. அவர்களால் மக்களுக்கு எந்தச் சேவையூம் செய்யவூம் முடியாது.
எனவே இம்முறை கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வூ பெற்றுத்தர நான் ஐக்கிய சுதந்திர முன்னணியூடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறேன். நூறு வீதம் எனது வெற்றி நிச்சயம் என்றார் முன்னாள் கிழக்கு முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்.
Comments
Post a Comment