ஐ.ம.சு.மு யின் வேட்புமனுப்பத்திரத்தில் TMVP கையொப்பமிட்டது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணத்திற்கான வேட்பு மனுவில் ரிஎம்விபி எனப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில்கையொப்பமிட்டதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலான கல்முனை நியூஸ் இணையத்திற்கு  தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சுநத்திர முன்னணியில் தமது கட்சியை சேர்ந்த 12 பேர் கிழக்கு மாகாணத்தில் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் தலைமையில் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன், நாகலிங்கம் ஜெயம், மோகன், பிரசாந்தன், பிரதீப் மாஸ்டர், சிறிதரன் என்கின்ற 6 பேரும் திருமலை மாவட்டத்தில் நவரட்ணராஜா, நளினிகாந்தன் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட ரகு வின் சகோதரன்) செந்தூரன் என்கின்ற மூவரும், அம்பாறை மாவட்டத்தில் புஸ்பராஜா , செல்வராஜா , இனியபாரதி என்கின்ற மூவரும் போட்டியிடுவதாக தெரிவித்தார். 

கிழக்கு மாணத்தில் ஐ.ம.சு.மு சார்பில் தமது கட்சியின் தலைவரே தலைமைவேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அவர் தமது கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டெனவும் கூறியதுடன் இதுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் முதலமைச்சர் பதவி தொடர்பாக எந்தவொரு கட்சிக்கும் எவ்வித ஒப்புதல்களும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று