கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கு மாநகர சபை உறுப்பினர் பறக்கதுள்ளாஹ் நிதி ஒதுக்கீடு!
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கதுள்ளாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கு கடினபந்து ஆடுகள விரிப்பு கையளிக்கும் முகமாக கல்முனை றினோன் மற்றும் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகங்களுக்கிடையே சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், கல்முனை கிரிக்கெட் கவுன்ஸில் செயலாளர் ஏ.வி.எம். பைஸால் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற ஜிம்கானா வி.கழகத்திற்கு முறையே வெற்றிக்கேடயத்தையும், போட்டியின் சிறப்பாட்டக்காறருக்கான கிண்ணத்தையும் வழங்குவதையும் இரு அணிவீராகளையும் காணலாம்.
Comments
Post a Comment