கொழும்பு MMC பதவியை தூக்கி எறிந்து விட்டு கிழக்கு தேர்தலில் குதிக்கிறார் அசாத் சாலி!


கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அசாத் சாலி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இன்று தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்கள் முன்னணி எனும் அமைப்பை உருவாக்கி எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது என்று உலமா சபையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை உதாசீனம் செய்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்தே தான் இத்தேர்தலில் களமிறங்க தீர்மானித்ததாக அசாத் சாலி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது