மாற்றுதிறனாளிகள் வாக்கப்பளிப்பதற்கான புதிய சட்ட விதிகள்!
எ திர்வரும் தேர்தல்களின் போது மாற்றுத்திறனாளிகள் தமக்கான உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்வதற்கென புதிய மாற்று சட்டவிதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பார்வை பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறாகவே புதிய சட்ட விதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 38(2) ஆம் பிரிவிற்கமையவே இச்சட்ட விதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாற்றுத்திறனாளியொருவர் தனக்கான வாக்கினை வாக்களிப்பு நிலையத்தில் வைத்து அடையாளமிட்டு கொள்வதற்கென உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்ல வேண்டும். ஆயினும் அவ்வாறு உடனழைத்துச் செல்லப்படும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டுமென்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவர் அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அதிகாரமளிக்கப்பட...