கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் !விசேட தேவை மாணவர்களுக்கு ஜப்பான் நாட்டவர் நியமனம்
கல்முனை கல்வி மாவட்டத்தின் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட விசேட தேவை உடைய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் கல்வியை விருத்தி செய்யூம் பொருட்டு கல்வி அமைச்சினால் ஜெய்கா திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜெய்க்கா திட்ட தொண்டர் ஒருவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரான செல்வி சௌரி சோனோ கடந்த வாரம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
Comments
Post a Comment