திவிநெகும திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி திவிநெகும 06ஆம் கட்ட வேலை திட்டம் கல்முனையில் ஆரம்பம்



திவிநெகும  திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி திவிநெகும 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெறவிருக்கும்  நிலையில், அதற்காக   கல்முனை  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய இத்துறை சார் அரசாங்க அதிகாரிகளுக்கும்  தயார்செய்யும்  கருத்தரங்கு  இன்று  இடம்பெற்றது.



கல்முனை பிராந்திய கமநல விரிவாக்கல் அலுவலகத்தின் அனுசரனையுடன் கல்முனை  பிரதேச செயலகத்தால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார  உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்காக, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம்பெற்றது.
திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக, நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது  தொடர்பாகவும்  பிரதேச ரீதியாக  நாற்று கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது  தொடர்பாகவும்  அறிவூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்  எ.எம்.ஹனீபா, திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார், கிராம நிர்வாக  உத்தியோகத்தர் லாகிர், திவிநெகும  முகாமையாளர்கலான எ.சி.அன்வர், எஸ்.எஸ்.பரீரா ,எம்.எம்.எம்.முபீன்   ஆகியோர் உட்பட வளவாலர்களாக விவசாய போதன ஆசிரியர்களான எஸ்.சசிகரன், எம்.எப்.எம்.நபாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்