பெரிய நீலாவணை அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி அம்பாள் தேவஸ்தான பால் குட பவனி
கல்முனை பெரிய நீலாவணை அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி அம்பாள் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தையொட்டி பால் குட பவனியுடனான பாலாபிஷேக பேரு விழாவும் நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் வேண்டி விசேட பூசை வழி பாடுகளும் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.
பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானத் திலிருந்து அடியார்களின் பால் குட பவனி அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி தேவஸ்தானத்தை சென்றடைந்து அங்கு வழி பாடுகளும் பாலாபிசேக பேரு விழாவும் இடம் பெற்றன.
அடியவர்கள் தங்களின் நேர்த்தியை நிறைவேற்ற தீ சட்டி,நெய் விளக்கு, பால்குடம் சுமந்து பவனியாக சென்று பாலாபிசேகம் செய்தனர். பால் குட பவனியில் பெரியநீலாவண யை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆன் பெண் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment