முழக்கம் அப்துல் மஜீத் கல்முனை மாநகர சபை உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத் இன்று மேயர் நிசாம் காரியப்பர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சத்தியப்பிரமாண நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள், மாநகர ஆணையாளர், செயலாளர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Comments
Post a Comment