தேசிய உற்பத்தி திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு இரண்டாம் இடம்.
இவ்வாண்டு தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களிற்கிடையில் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
இதற்கான தேசிய உற்பத்திதிறன் விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04ம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த தேசிய விருதினை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி எஸ். ஜலதீபன் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இவ்விருதானது தலைமைத்துவம் - அர்ப்பணிப்பு- இலக்குகளை அடைவதற்கான உத்திகள்- பசுமை உற்பத்தித்திறன்- வளங்களினை கொண்டு உச்ச பயன் பெறும் விதம்- உத்தியோகத்தர் நலன்- ஏனைய சமூக நிறுவனங்களோடு செயலாற்றும் விதம்- வாடிக்கையாளர் திருப்தி- வாடிக்கையாளர் வழிகாட்டித்தகவல்கள் உட்பட பல விடயங்கள் இதன் போது கருத்திற்கொள்ளப்படுகின்றன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் பிரதேச செயலாளரின் சிறப்பான தலைமைத்துவத்தில் இயங்குவதானது இதன் வெற்றிக்கு காரணமாகும். மூவினங்களையும் சேர்ந்த திருகோணமலை மாவட்ட மக்களிற்கு கிடைத்த வெற்றியாக இதனை நாம் கருதலாம்.
Comments
Post a Comment