காஸாவில் நீண்ட கால போர் நிறுத்தம்!
காஸா பகுதியில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே நீண்ட கால போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று அறிவித்துள்ளார்.
இன்று மாலை ஏழு மணிமுதல் குறித்த ஒப்பந்தம் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டார், எகிப்து உட்பட இந்த ஒப்பந்தம் நிறைவடைய பங்களிப்பு செலுத்திய அனைவருக்கும் அப்பாஸ் நன்றி செலுத்தியுள்ளார்.
மேலும், காஸாவில் நிவாரண மற்றும் மறுசீரமைப்பிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உடனடியாக அனுப்பப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை , இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பாலஸ்தீன் போராட்டக் குழுக்கள் வரலாற்று வெற்றி அடைந்துள்ளதாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் ஸாமி அபூ சுஹ்றி அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment