கல்முனையை தக்கவைக்க முடியாதவர்கள் கரையோர மாவட்டம் கேட்பது வெட்கக் கேடு -கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார்

கல்முனை பிரதேச செயலகத்தையே  கையிழந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் கரயோரமாவட்டத்தை பெறுவதென்பது பகல்  கனவாகும் என கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ .நபார் தெரிவித்துள்ளார் .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசன் அலி  ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும்  ,கிழக்கு முதலமைச்சர் பதவி அல்ல; முஸ்லிம் கரையோர மாவட்டமே முக்கியம் என்று கூறியுள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில்  மேற்படி அறிக்கையினை நபார் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.ஹசனலி விடுத்திருக்கும் இவ்வறிக்கை முஸ்லிம் மக்களுக்கு புதிதானதொன்றல்ல  தேர்தல் காலத்தில் இந்த கரையோர மாவட்ட கொடியை உயர்த்திப் பிடிப்பது அவரது கடந்த கால அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது . தேர்தல் காலத்தில் மட்டும் இவ்வாறான அறிக்கையை விட்டு விட்டு தேர்தல் முடிந்ததும் மகிந்தவின் பின்னால் மந்தைக்  கூட்டம் போன்று ஒதுங்குவார்கள். அதன் பிறகு எல்லாமே மறந்து விடும் .



இந்த அறிக்கையும் ஊவா மாகாண  சபை தேர்தலை முன் வைத்தே விடப்பட்டுள்ளது . இவரது இந்த அறிக்கையினை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஹசனஅலிக்கு  தெரியும் . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் இணைந்து  தனியாக போட்டி இட்டாலும் கடைசியில் மகிந்தவிடம் தான் சரணடைவார்கள் .  இந்த அரசுடன் ஒட்டியிருக்கும் காலமெல்லாம் முஸ்லிம்  தலைமத்துவங்களால்  முஸ்லிம்களுக்கு சிறிதேனும் அதிகாரத்தை அவர்களால் பெற்றுக் கொடுக்கமுடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக விளங்கும்  கல்முனை பிரதேச செயலகத்துக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப் பட்டதனையே  தடுக்க முடியாதவர்கள் கரையோர மாவட்டம் பெற நினைப்பது ஏமாற்று வித்தையாகும்  என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார் . 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்