ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று இடம்பெற்றது
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று இடம்பெற்றது.
போரத்தின் 19ஆவது மாநாடு கொழும்பு – 07 இலுள்ள தேசிய நூதனசாலையில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்களாக நீடிக்க பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியது.
அத்துடன் போரத்தின் உறுப்புரிமை நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் பி.எம்.முர்ஷிதீனுக்கு உறுப்புரிமை வழங்க பொதுச் சபை அனுமதி வழங்கியது.
முன்னாள் பொதுச் செயலாளர் முர்ஷிதீனினால் போரத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெற்றமையினை அடுத்தே இந்த உறுப்புரிமை வழங்கப்பட்டது.
இதனையடுத்து புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. இதற்கமைய தலைவராக என்.எம்.அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் பொருளாளராக எச்.எம்.பாயிஸும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
பேரை தெரிவுசெய்தவற்கான செயற்குழுவிற்கு 19 பேர் போட்டியிட்டனர். இதன் காரணமாக செயற்குழுவிற்கு தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலினை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சீதா ரஞ்சனி மற்றும் லசந்த ருகுணே ஆகியோர் நடத்தினார்.
இதன்படி, எம்.பி.எம் பைருஸ், கலைவாதி கலீல், ஜாவித் முனவர்,இர்சாத் ஏ காதர், புர்கான் பீ இப்திக்கார், எம்.இசட் அஹமத் முனவர், ரசீத் எம். ஹபீல், எஸ்.ஏ. அஸ்கர் கான், சாதிக் சிஹான், தாஹா முசம்மில், பிரோஸ் மொஹமட், அப்துல் சலாம் யாசீன், ஜெம்ஸித் அஹமத்,முபாரக் அலி மற்றும் ஜே.இஸட்.ஏ நமாஸ் ஆகியோர் செயற்குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.
Comments
Post a Comment