இலங்கை இராணுவத்தில் முதலாவது முஸ்லிம் பெண்

இராணுவத்தில் முதற் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இணைந்துள்ளார்.
 
அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி நிறைவுசெய்துள்ளார். இந்த முஸ்லிம் யுவதியும் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 35 தமிழ் யுவதிகளும் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர்.

இப்பயிற்சி நெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது. இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 16 பேரும் மட்டக்களப்பில் 15 பேரும் அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவுசெய்தனர். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்