மாற்றுதிறனாளிகள் வாக்கப்பளிப்பதற்கான புதிய சட்ட விதிகள்!

திர்வரும் தேர்தல்களின் போது மாற்றுத்திறனாளிகள் தமக்கான உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்வதற்கென புதிய மாற்று சட்டவிதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பார்வை பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறாகவே புதிய சட்ட விதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 38(2) ஆம் பிரிவிற்கமையவே இச்சட்ட விதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதற்கேற்ப மாற்றுத்திறனாளியொருவர் தனக்கான வாக்கினை வாக்களிப்பு நிலையத்தில் வைத்து அடையாளமிட்டு கொள்வதற்கென உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்ல வேண்டும். ஆயினும் அவ்வாறு உடனழைத்துச் செல்லப்படும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டுமென்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவர் அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அதிகாரமளிக்கப்பட்ட முகவரரொருவராகவோ, அல்லது வாக்களிப்பு நிலையத்தின் முகவரொருவராகவோ செயற்படுபவரல்லாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும், முக்கியமாக ஏதேனும் வலிமையிழப்பொன்றிற்கு உட்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி, தகுதிச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை தேர்தல்கள் நடாத்தப்படவுள்ள மாகாண சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இப்படிவத்தின் பிரதியை தேர்தல்கள் திணைக்கள இணையத்தளத்திலிருந்தும் www.slelections.gov.lk பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே மாற்றுதிறனாளிகள் கிராம அலுவலரிடமிருந்து விண்ணப்பப்படிவமொன்றினை பெற்று அதனை நிரப்பிக் கொடுத்து கிராம அலுவலரின் அத்தாட்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு அதன் பின்னர் அச் சான்றிதழை அரசாங்க வைத்திய அலுவலரிடமும் சமர்பித்தல் வேண்டும். வைத்திய அதிகாரியினால் வாக்காளர் பரீட்சிக்கப்பட்டு அப்படிவத்தில் வாக்காளரின் தகைமை குறிக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்படும்.

வலிமையிழப்பிற்கு ஆளாகிய வாக்காளர் தனது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை, அல்லது வாக்களிப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஏதேனுமோர் அடையாள அட்டை மற்றும் இத்தகுதிச் சான்றிதழை எடுத்துக் கொண்டு உதவியாளரொருவருடன் செல்லுதல் அவசியமாகும்.

அதன்பின்னர் வாக்களிப்பு நிலைய பணியாளரினால் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வழமையான பணிகளின் பேரில் வாக்காளரின் உதவியாளர் வாக்கினை அளிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்