கிழக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் போத்தல்கள் விநியோகம்!
கிழக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இராணுவத்தினர் தண்ணீர் போத்தல்களை விநியோகித்துவருகின்றனர்.
புத்த சேனல் மற்றும் கொழும்பு சம்போதி விகாரை அனுசரணையில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நீர் நன்கொடைப் பிரசாரத்தின் மூலம் கிடைத்த தண்ணீர் போத்தல்களே இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் வரட்சி காரணமாக மக்கள் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment