கல்முனை கல்வி வலயத்தில் 12.00மணிக்கு பாடசாலை கலைப்பு ! வலது குறைந்த மாணவன் தனியாக தவிப்பு !வலய பணிப்பாளர் உடன் நடவடிக்கை

கல்முனை கல்வி வலயத்தில்  12.00 மணிக்கு பாடசாலையை கலைத்து விட்டு 2.10க்கு ஒப்பமிட்ட  ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படும் என்று கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்று 12.00 மணிக்கு கலைக்கப் பட்டதாக  பொது மகன் ஒருவர் தன்னிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து உடனடியாக அப்பாடசாலைக்கு சென்ற வேளை  செய்யப் பட்ட முறைப்பாடு ஊர்ஜிதம் செய்யப்பட்டது . பாடசாலைக்குள்  சென்ற வேளை  அங்கு ஒரேஒரு மாணவனை தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை அம்மாணவன் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தான்  அம்மாணவனிடம்  விசாரித்த போது  பாடசாலை 12.00 மணிக்கு கலைக்கப் பட்டதாகவும்  என்னை அழைத்து செல்ல எனது சகோதரன் 2.00 மணிக்குதான் வருவார் எனவும் தெரிவித்தார் . அந்த மாணவர் வலது குறைந்த நடக்க முடியாதவர்  அவரை பார்த்து நான் மன வேதனை அடைந்து  அதிபரை பாடசாலைக்கு வருமாறு அழைத்து  வரவு இடாப்பை பார்த்த போது  இருவரை தவிர மற்றைய ஆசிரியர்கள் அனைவரும் 2.10க்கு ஒப்பமிட்டிருந்தனர் . அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது.

இதனை விடவும் குறித்த வலது குறைந்த மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு  எவராலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் பாடாமல் உறவினர் வரும் வரை காத்திருந்த அம்மாணவனின் மனநிலை எவ்வாறாக இருந்திருக்கும் என்பதை நினைக்கும் போது கவலையாக இருந்தது என்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஜலீல்  இன்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்ற உத்தியோகத்தர் கூட்டத்தில் தெரிவித்தார் .

மேலும்  சில பாடசாலைகளில் நேரம் தாமதமாகி வரும் மாணவர்களை வீதியில் நிறுத்திவைத்து விட்டு  நேரம் தாமதமாகி வரும் ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார் . 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்