வாழ்வின் எழுச்சி 'திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு தயாராகும் கல்முனை !
(அப்துல் அஸீஸ் )
வாழ்வின் எழுச்சி 'திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும், அதற்கான கிராம மட்ட செயலணி அமைப்பது தொடர்பாகவும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று (25.08.2014) கல்முனைபிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்காக இடம்பெற்ற இக் கருத்தரங்கில் எதிர்வரும்
ஒக்டோபர் 20ஆம் திகதி தேசியரீதியில் இடம்பெறவிருக்கும் இன் நிகழ்வில் எமது
பிரதேசரீதியாக எவ்வாறான முன்னாயத்தங்களை மேற்கொள்வது எனவும்,குறிப்பாக
இதற்கான கிராமமட்ட செயலணிகளை எவ்வாறு தெரிவுசெய்வது என்பது தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது.
திவிநெகும தலைமைப்பீட முகாமையா ளர் எ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தி்ட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார், மாவட்ட செயலக திவிநெகும சிரேஸ்ட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம் , கிராம நிர்வாக உத்தியோகத்தர் எ.எச். லாகிர், திவிநெகும சிரேஸ்ட முகாமையாளர்களான எ.சி.அன்வர், எஸ்.எஸ்.பரீரா மாற்றும் திவிநெகும வங்கி முகாமையாளர்களான எஸ்.சதீஸ்,எம்.எம்.எம்.முபீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment