கரவாகு மேற்கு நூலகத்தை திறக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்
கல்முனை கரவாகு மேற்கு பிரதேசத்தில் ஒருவருடத்துக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புரநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கரவாகு மேற்கு பொது நூலகத்தை அடுத்தமாதம் திறப்பதற்கு கல்முனை மாநகர சபையில் இன்று நடை பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது .
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு இன்று பிற்பகல் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்றது. இந்த நூலகத்தை திறந்து கரவாகு மேற்கு பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனளிக்குமாறு மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ .நபார் சபையை கேட்டுக் கொண்டாதன் பிரகாரம் கரவாகு மேற்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் தொடர்ந்தும் கரவாகு மேற்கு நூலகம் என்ற பெயரில் திறந்து வைப்பதற்கு சபை ஏகமனதான அங்கீகாரம் வழங்கியுள்ளது .
கடந்த ஒருவருட காலமாக பொது நூலகம் எந்த வசதிகளும் இன்றி சேனைக்குடியிருப்பு கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் வாடகைக்கு இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது .
Comments
Post a Comment