கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டியில்
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிர்லியன் கழகத்தின் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது .
இதனையொட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(29) பி.ப 4.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது என கழகத்தின் பொது செயலாளர் எஸ்.ரீ .பஸ்வக் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் கல்முனை பிர்லியண்ட் கழகத்துக்கும் காத்தான்குடி சண் றைஸ் கழகத்துக்குமிடையே உதை பந்தாட்டப் போட்டி இடம் பெறவுள்ளது . போட்டியில் எஹியா அரபாத் 200வது போட்டியை சந்திக்கின்றார் .
கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வுககளில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் கௌரவ அதிதியாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரக்கீப்> கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
Comments
Post a Comment