நீதி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு அபாண்டமானது -
குற்ற சாட்டை மறுக்கிறார் நற்பிட்டிமுனை SLMC போராளி சரூக்
கடந்த 2014.08.22ஆம் திகதி இணைய தளங்களில் வெளி வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுஊப் ஹக்கீமை நற்பிட்டிமுனை SLMC மத்திய குழு கொழும்பில் சந்தித்ததாகவும் , நீதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது குற்ற சாட்டுக்கள் முன் வைத்ததாகவும் வெளியான செய்திகளை நற்பிட்டிமுனை SLMC கட்சிப் போராளிகளில் ஒருவரான எம். சரூக் மறுத்துள்ளார் .
நீதி அமைச்சரினால் நற்பிட்டிமுனைக்கு வழங்கப் பட்ட தொழில் வாய்ப்புக்கள் அனைத்தும் SLMC கட்சிப் போராளிகளுக்கே வழங்கப் பட்டதென்பது ஊர் அறிந்த உண்மையாகும் . இதில் மாற்றுக் கட்சிக் காரர்களுக்கு நீதி அமைச்சினால் எவ்வித தொழிலும் வழங்கப் படவில்லை .என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன் என சரூக் தெரிவித்துள்ளார் .
நீதி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுக்காக SLMC கட்சிப் போராளிகள் அனைவரும் மிக மனவேதனை அடைவதுடன் மன்னிப்பும் கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
நீதி அமைச்சரின் இணைப்பு செயலாளராக ரஹ்மத் மன்சூர் நியமிக்கப் பட்ட பின்னர்தான் அம்பாறை மாவட்ட கட்சி போராளிகளின் தொழில் வாய்ப்பு ஊருக்குரிய வேலை திட்டம் என்பன நேர்த்தியான முறையில் நடை பெறுகிறது எனவும் கட்சிப் போராளியான சரூக் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment