Posts

மாற்றுதிறனாளிகள் வாக்கப்பளிப்பதற்கான புதிய சட்ட விதிகள்!

Image
எ திர்வரும் தேர்தல்களின் போது மாற்றுத்திறனாளிகள் தமக்கான உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்வதற்கென புதிய மாற்று சட்டவிதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பார்வை பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறாகவே புதிய சட்ட விதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் 38(2) ஆம் பிரிவிற்கமையவே இச்சட்ட விதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாற்றுத்திறனாளியொருவர் தனக்கான வாக்கினை வாக்களிப்பு நிலையத்தில் வைத்து அடையாளமிட்டு கொள்வதற்கென உதவியாளரொருவரை உடனழைத்துச் செல்ல வேண்டும். ஆயினும் அவ்வாறு உடனழைத்துச் செல்லப்படும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டுமென்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவர் அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் அதிகாரமளிக்கப்பட...

திவிநெகும திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி திவிநெகும 06ஆம் கட்ட வேலை திட்டம் கல்முனையில் ஆரம்பம்

Image
திவிநெகும  திணைக்களத்தின் வாழ்வின் எழுச்சி திவிநெகும 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெறவிருக்கும்  நிலையில், அதற்காக   கல்முனை  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய இத்துறை சார் அரசாங்க அதிகாரிகளுக்கும்  தயார்செய்யும்  கருத்தரங் கு   இன்று  இடம்பெற்றது. கல்முனை பிராந்திய கமநல விரிவாக்கல் அலுவலகத்தின் அனுசரனையுடன் கல்முனை  பிரதேச செயலகத்தால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செயப்பட்டிருந்தது. திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார  உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்காக, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம்பெற்றது. திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக, நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது  தொடர்பாகவும்   பிரதேச ரீதியாக  நாற்று கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது  தொடர்பாகவும்  அறிவூட்டப்பட்டது. இக்கூட்டத்தில்,...

கல்முனை பிரதிமேயராக மஜீத் நியமனம் பிர்தௌஸ் ராஜினாமா

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பதவிகளுக்காக அல்ல. இந்த வகையில் கல்முனை மாநகரின் பிரதி மேயர் பதவி நம்பிக்கையின் அடிப்படையிலேயே எனக்குத் தரப்பட்டது. பிரதி மேயராக எமது கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், இன்று புதிய உறுப்பினராகப் பதவிப்பிரமணம் செய்துகொண்டுள்ளவருமான ஏ.எல்.அப்துல் மஜீத்தை நியமிக்க வேண்டுமென்பதே கட்சியினதும் எல்லோரினதும் விருப்பமாகும். எனவே இதற்கு வழிவிட்டு பிரதி மேயர் பதவியிலிருந்து ஓரிரு தினங்களில் இராஜினாமாச் செய்து எமது கட்சித் தலைவரிடம் இராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என பிரதி மேயர் பிர்தௌஸ் தெரிவித்தார் .  கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் எப்பொழுதும் கட்டுப்பட்டும், முழு விசுவாத்துடனும் செயற்படுபவன் நான். எமது புதிய உறுப்பினர் அப்துல் மஜீத் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஒரு பெரும் தியாகி ஆவார். அவருக்கு கட்சியால் நடாளுமன்ற உறுப்பனர்கதவியே வழங்கப்படவேண்டுமென சாய்ந்தமருது மத்திய குழுவினால் கோரிக்கை விடுத்தவன் நான். அவர் பிரதி மேயராக நியமிக்கப்படும்போது, மேலும் சிறப்பான சேவைகளை அவர் மக்களுக்கு ஆற்றுவார் என்பது திண்ணமாகு...

இனவாதம் ,பிரதேசவாதம் பேசுபவர்கள் நிலைத்ததும் இல்லை அவர்கள் தீக்குளிப்பதில் தவறும் இல்லை

Image
இனவாதம் பேசிக்கொண்டும், பிரதேசவாதம் பேசிக்கொண்டும் தனது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்களை பலியாக்கும் அரசியல்வாதிகள் அதைவிட தீக்குளிப்பது மேலாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (27) புதன்கிழமை பிற்பகல் முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் கூடியது. இதன்போது உறுப்பினர் ஒருவர் கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான நூலகம் அமைந்துள்ள இடம், அதற்கு பெயரிடுதல் மற்றும் திறந்து வைத்தல் தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டு இனவாதக்கருத்துக்களை கூறி தான் தீக்குளிக்கப்போவதாக கூறியபோது அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் இவ்வாறு தெரிவித்தார். ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கின் முகவெத்திலை என்றும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு மாநகரம் கல்முனை என்றும் நாம் பெருமையாகப் பேசிக்கொள்கின்றோம். இங்கு பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்-தமிழ் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சமூகத...

கல்முனை கல்வி வலயத்தில் 12.00மணிக்கு பாடசாலை கலைப்பு ! வலது குறைந்த மாணவன் தனியாக தவிப்பு !வலய பணிப்பாளர் உடன் நடவடிக்கை

Image
கல்முனை கல்வி வலயத்தில்  12.00 மணிக்கு பாடசாலையை கலைத்து விட்டு 2.10க்கு ஒப்பமிட்ட  ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படும் என்று கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் . கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்று 12.00 மணிக்கு கலைக்கப் பட்டதாக  பொது மகன் ஒருவர் தன்னிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து உடனடியாக அப்பாடசாலைக்கு சென்ற வேளை  செய்யப் பட்ட முறைப்பாடு ஊர்ஜிதம் செய்யப்பட்டது . பாடசாலைக்குள்  சென்ற வேளை  அங்கு ஒரேஒரு மாணவனை தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை அம்மாணவன் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தான்  அம்மாணவனிடம்  விசாரித்த போது  பாடசாலை 12.00 மணிக்கு கலைக்கப் பட்டதாகவும்  என்னை அழைத்து செல்ல எனது சகோதரன் 2.00 மணிக்குதான் வருவார் எனவும் தெரிவித்தார் . அந்த மாணவர் வலது குறைந்த நடக்க முடியாதவர்  அவரை பார்த்து நான் மன வேதனை அடைந்து  அதிபரை பாடசாலைக்கு வருமாறு அழைத்து  வரவு இடாப்பை பார்த்த போது  இருவரை தவிர மற்றைய ஆசிரியர்கள் அனைவரும் 2.10க்கு ஒப்பமிட்டிருந்தனர்...

இளம் எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாக மாற்ற வேண்டும்- மே.மா கல்விப் பணிப்பாளர்

Image
எம்.ரீ.எம்.பாரிஸ் மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி ,  அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் பிறழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி  அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதை சொல்தல் கலை வளர்க்கின்றது.   இளம் மாணவ எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாக  மாற்றுவம் கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும்  என  மேல் மாகாண கல்விப் பணிப்பளார்  விமல் குணரத்ன  தெரிவித்தார். கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்று வருகின்றது என மேல்மாகாணக் கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன  தெரிவித்தார். களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான ' ஆக்கபூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான ஆறுமாதச் செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் அண்மையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற போதே ,  அவர் இவ்வாறு  தெரிவித்தார். மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை அபிவ...

முழக்கம் அப்துல் மஜீத் கல்முனை மாநகர சபை உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Image
கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத் இன்று  மேயர் நிசாம் காரியப்பர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சத்தியப்பிரமாண நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள், மாநகர ஆணையாளர், செயலாளர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

காஸாவில் நீண்ட கால போர் நிறுத்தம்!

Image
காஸா பகுதியில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே நீண்ட கால போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று அறிவித்துள்ளார்.  இன்று மாலை ஏழு மணிமுதல் குறித்த ஒப்பந்தம் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   கட்டார், எகிப்து உட்பட இந்த ஒப்பந்தம் நிறைவடைய பங்களிப்பு செலுத்திய அனைவருக்கும் அப்பாஸ் நன்றி செலுத்தியுள்ளார்.    மேலும், காஸாவில் நிவாரண மற்றும் மறுசீரமைப்பிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உடனடியாக அனுப்பப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.   இதே வேளை , இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பாலஸ்தீன் போராட்டக் குழுக்கள் வரலாற்று வெற்றி அடைந்துள்ளதாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் ஸாமி அபூ சுஹ்றி அறிவித்துள்ளார்.

கரவாகு மேற்கு நூலகத்தை திறக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்

Image
கல்முனை கரவாகு மேற்கு பிரதேசத்தில் ஒருவருடத்துக்கு முன்னர்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  புரநெகும  திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  கரவாகு மேற்கு பொது நூலகத்தை அடுத்தமாதம் திறப்பதற்கு கல்முனை மாநகர சபையில்  இன்று நடை பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை  மாதாந்த அமர்வு  இன்று பிற்பகல் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர்    தலைமையில் நடை பெற்றது. இந்த நூலகத்தை திறந்து கரவாகு மேற்கு பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும்  பயனளிக்குமாறு மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ .நபார்  சபையை கேட்டுக் கொண்டாதன் பிரகாரம்  கரவாகு மேற்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன்  தொடர்ந்தும் கரவாகு மேற்கு நூலகம் என்ற பெயரில்  திறந்து வைப்பதற்கு சபை ஏகமனதான அங்கீகாரம் வழங்கியுள்ளது . கடந்த ஒருவருட காலமாக பொது நூலகம் எந்த வசதிகளும் இன்றி சேனைக்குடியிருப்பு கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் வாடகைக்கு இயங்கி வந்தமை   குறிப்பிட...

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக ஏ.எல்.அப்துல் மஜீத் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.

Image
கல்முனை மாநகர சபையின் ஆளும் தரப்பான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.அப்துல் மஜீத் புதிய உறுப்பினராக இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் மாநகர சபையின் மூன்று மாதாந்தக் கூட்டங்களுக்கு தொடர்ந்து சமுகமளிக்காமையால் உறுப்புரிமை இழந்ததைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினராக அப்துல் மஜீதை முஸ்லிம் காங்கிரஸ் சிபார்சு செய்து நியமனம் செய்துள்ளது.  புதிய உறுப்பினர் மஜீத் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் மாநகர மேயர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் முன்னிலையில் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.  இதேவேளை புதிய உறுப்பினர் அப்துல் மஜீத் சில தினங்களில் பிரதி மேயராகவும் பதவியேற்கவுள்ளர் எனவும், இதற்கு ஏதுவாக தற்போதைய பிரதிமேயர் பிர்தௌஸ் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் உறுப்புரிமை இழந...

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் !விசேட தேவை மாணவர்களுக்கு ஜப்பான் நாட்டவர் நியமனம்

Image
கல்முனை கல்வி மாவட்டத்தின் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட விசேட தேவை உடைய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் கல்வியை விருத்தி செய்யூம் பொருட்டு கல்வி அமைச்சினால் ஜெய்கா திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜெய்க்கா திட்ட தொண்டர் ஒருவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு நியமிக்கப் பட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரான செல்வி சௌரி சோனோ கடந்த வாரம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.  கல்முனை வலயத்தில் 06 விசேட தேவை பாடசாலைகள் இயங்குகின்றமை குறிப்பிடத் தக்கது

குருந்தையடி அப்பா ஞாபகார்த்த வருடாந்த மௌலித்

Image
 எஸ்.எம்.எம்.றம்ஸான் ) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட வீரத்திடல் 4ஆம் குளனியில் அமைந்திருக்கும் தர்ஹாவில் குருந்தையடி அப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஞாபகார்த்த வருடாந்த கொடியேற்றம், மௌலித், கந்தூரி நிகழ்வுகள்      இடம் பெற்றது.  குருந்தையடி அப்பா வலியுல்லாஹ் ஸியாரம் தர்ஹாவின் நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெறம் இந்நிகழ்வில் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த கலந் து  கொண்டனர்.

கல்முனையை தக்கவைக்க முடியாதவர்கள் கரையோர மாவட்டம் கேட்பது வெட்கக் கேடு -கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார்

Image
கல்முனை பிரதேச செயலகத்தையே  கையிழந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் கரயோரமாவட்டத்தை பெறுவதென்பது பகல்   கனவாகும் என கல்முனை மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ .நபார் தெரிவித்துள்ளார் . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசன் அலி  ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும்  , கிழக்கு முதலமைச்சர் பதவி அல்ல; முஸ்லிம் கரையோர மாவட்டமே முக்கியம்  என்று கூறியுள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில்  மேற்படி அறிக்கையினை நபார் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.ஹசனலி விடுத்திருக்கும் இவ்வறிக்கை முஸ்லிம் மக்களுக்கு புதிதானதொன்றல்ல  தேர்தல் காலத்தில் இந்த கரையோர மாவட்ட கொடியை உயர்த்திப் பிடிப்பது அவரது கடந்த கால அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது . தேர்தல் காலத்தில் மட்டும் இவ்வாறான அறிக்கையை விட்டு விட்டு தேர்தல் முடிந்ததும் மகிந்தவின் பின்னால் மந்தைக்  கூட்டம் போன்று ஒதுங்குவார்கள். அதன் பிறகு எல்லாமே மறந்து விடும் . இந்த அறிக்கையும் ஊவா மாகாண...

கிழக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் போத்தல்கள் விநியோகம்!

Image
கிழக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இராணுவத்தினர்  தண்ணீர் போத்தல்களை விநியோகித்துவருகின்றனர்.   புத்த சேனல் மற்றும் கொழும்பு சம்போதி விகாரை அனுசரணையில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நீர் நன்கொடைப் பிரசாரத்தின் மூலம் கிடைத்த தண்ணீர் ​போத்தல்களே இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.   கிழக்கு மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் வரட்சி காரணமாக மக்கள் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு இரண்டாம் இடம்.

Image
இவ்வாண்டு தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களிற்கிடையில் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் போட்டியில்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான தேசிய உற்பத்திதிறன்  விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04ம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த தேசிய விருதினை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி எஸ். ஜலதீபன் பெற்றுக் கொள்ளவுள்ளார். இவ்விருதானது தலைமைத்துவம் - அர்ப்பணிப்பு- இலக்குகளை அடைவதற்கான உத்திகள்- பசுமை உற்பத்தித்திறன்- வளங்களினை கொண்டு உச்ச பயன் பெறும் விதம்- உத்தியோகத்தர் நலன்- ஏனைய சமூக நிறுவனங்களோடு செயலாற்றும் விதம்- வாடிக்கையாளர் திருப்தி- வாடிக்கையாளர் வழிகாட்டித்தகவல்கள் உட்பட பல விடயங்கள் இதன் போது கருத்திற்கொள்ளப்படுகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் பிரதேச செயலாளரின் சிறப்பான தலைமைத்துவத்தில் இயங்குவதானது இதன் வெற்றி...

கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்

Image
(அகமட் எஸ். முகைடீன்) கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றொபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஒரு வார கால துருக்கி நாட்டிற்கான விஜயத்தின்போது மேற்படி ஒப்பந்தம் கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேர்ஹாட் அக்பினர் மற்றும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஒப்பமிட்டு கைச்சாத்திட்டனர். கேன்  அமெரிக்கன் பல்கலைக்கழகமானது லன்டன், அமெரிக்கா, துருக்கி, சிங்கப்பூர், ஹெங்கொங் போன்ற நாடுகிளில் காணப்படுகிறது. தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் குறித்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடு இலங்கையில் மெற்றோபொலிடென் கல்லூரியினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு வெளிநாட்டில் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய விரும்பும் மாணவர்கள் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு கற்கை நெறிக்காக குறித்த பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஏதேனும் ஒரு நாட்...

வாழ்வின் எழுச்சி 'திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு தயாராகும் கல்முனை !

Image
(அப்துல் அஸீஸ் ) வாழ்வின் எழுச்சி 'திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும், அதற்கான  கிராம மட்ட செயலணி அமைப்பது  தொடர்பாகவும் கல்முனை   பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு  நேற்று  (25.08.2014)  கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. கிராம உத்தியோகத்தர்கள்,  திவிநெகும அபிவிருத்தி   உத்தியோகத்தர்கள்,  அபிவிருத்தி   உத்தியோகத்தர்கள் ஆகியோர்க ளு க்காக இடம்பெற்ற இக்   கருத்தரங்கில்  எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி தேசியரீதியில் இடம்பெறவிருக்கும் இன் நிகழ்வில் எமது பிரதேசரீதியாக  எவ்வாறான முன்னாயத்த ங் களை மேற்கொள்வது எனவும்,குறிப்பாக இத ற் கான      கிராமமட்ட செயலணிகளை   எவ்வாறு தெரிவுசெய்வது என்பது  தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது. திவிநெகும  தலைமைப்பீட  முகாமையா ளர்  எ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்  தி்ட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார்,  மாவட்ட ...

கல்முனை விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீ்ட்டிலிருந்து விளையாட்டுக்கழகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டன. கல்முனை பிரில்லியண்ட் விக்டோரியாஸ் டொப் ஹீரோ மற்றும் இஸ்லாமாபாத் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்படடன. கல்முனைப்பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தி்ட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் ரீ.மோகனகுமார் திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றஸீன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இலங்கை இராணுவத்தில் முதலாவது முஸ்லிம் பெண்

Image
இராணுவத்தில் முதற் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இணைந்துள்ளார்.   அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி நிறைவுசெய்துள்ளார். இந்த முஸ்லிம் யுவதியும் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 35 தமிழ் யுவதிகளும் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சி நெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது. இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 16 பேரும் மட்டக்களப்பில் 15 பேரும் அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவுசெய்தனர். 

கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டியில்

Image
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை    பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிர்லியன் கழகத்தின் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது . இதனையொட்டி  எதிர்வரும் வெள்ளிக்கிழமை(29) பி.ப 4.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி  பொது மைதானத்தில் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது என கழகத்தின் பொது செயலாளர் எஸ்.ரீ .பஸ்வக்  தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கல்முனை பிர்லியண்ட் கழகத்துக்கும் காத்தான்குடி சண் றைஸ் கழகத்துக்குமிடையே  உதை  பந்தாட்டப் போட்டி இடம் பெறவுள்ளது . போட்டியில் எஹியா அரபாத் 200வது போட்டியை சந்திக்கின்றார் .  கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வுககளில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  கௌரவ அதிதியாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரக்கீப்> கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்  ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று இடம்பெற்றது

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று இடம்பெற்றது. போரத்தின் 19ஆவது மாநாடு கொழும்பு – 07 இலுள்ள தேசிய நூதனசாலையில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவின் பதவிக் காலத்தை இரண்டு வருடங்களாக நீடிக்க பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியது. அத்துடன் போரத்தின் உறுப்புரிமை நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் பி.எம்.முர்ஷிதீனுக்கு உறுப்புரிமை வழங்க பொதுச் சபை அனுமதி வழங்கியது. முன்னாள் பொதுச் செயலாளர் முர்ஷிதீனினால் போரத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெற்றமையினை அடுத்தே இந்த உறுப்புரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. இதற்கமைய தலைவராக என்.எம்.அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் பொருளாளராக எச்.எம்.பாயிஸும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். பேரை தெரிவுசெய்தவற்கான செயற்குழுவிற்கு 19 பேர் போட்டியிட்டனர். இதன் காரணமாக செயற்குழுவிற்கு தேர்தல் இடம்பெற்றது. இந்த தேர்தலினை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சீத...

ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, ஹரீஸ், பைசால் காசிம், உதுமாலெப்பை ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள கொச்சிக்காய் சவால்!

Image
ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge இனைப் போன்று மக்கள் நண்பனாகிய நான் அம்பாறை மாவட்ட ஒரு சில முக்கிய அரசியல்வாதிகளிடத்தில் ஒரு சவாலை விடுக்கின்றேன்.   அதுதான்  Hot chilli challenge அதாவது மிகவும் காரமான 2 மிளகாய்களை சாப்பிடுவது.  ஐஸ் வாளி சவால் - Ice Bucket Challenge ஆனது நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு ஒரு தொண்டு நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஐஸ் வாளி சவாலில் தண்ணீரை வீண்விரயம் செய்கிறார்கள் என்பதற்காக நான் அவ்வாறு அல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக எனது சவாலை விடுக்கின்றேன். நான் இந்த சவாலினை ; உள்ளுராச்சி சபைகள் கௌரவ அமைச்சர் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ உதுமாலெப்பை, கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஹரீஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் தலைவரும், நீதியமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களிடத்திலும் விடுக்கின்றேன். இவர்கள் அனைவரும் இன்னும் 48 மணித்தியாலத்துக்கு இடையில் ந...

நீதி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டு அபாண்டமானது -

Image
குற்ற சாட்டை மறுக்கிறார் நற்பிட்டிமுனை SLMC  போராளி சரூக்  கடந்த 2014.08.22ஆம் திகதி இணைய  தளங்களில் வெளி வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுஊப் ஹக்கீமை  நற்பிட்டிமுனை  SLMC  மத்திய குழு  கொழும்பில்  சந்தித்ததாகவும் , நீதி அமைச்சரின்  இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது குற்ற சாட்டுக்கள் முன் வைத்ததாகவும்  வெளியான  செய்திகளை  நற்பிட்டிமுனை SLMC  கட்சிப் போராளிகளில்  ஒருவரான  எம். சரூக் மறுத்துள்ளார் . நீதி அமைச்சரினால்  நற்பிட்டிமுனைக்கு வழங்கப் பட்ட தொழில் வாய்ப்புக்கள்  அனைத்தும் SLMC  கட்சிப் போராளிகளுக்கே வழங்கப் பட்டதென்பது  ஊர் அறிந்த உண்மையாகும் . இதில் மாற்றுக் கட்சிக் காரர்களுக்கு  நீதி அமைச்சினால் எவ்வித தொழிலும் வழங்கப் படவில்லை .என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன் என  சரூக் தெரிவித்துள்ளார் . நீதி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மீது  சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுக்காக  SLMC  கட்சிப் போராளிகள...

பெரிய நீலாவணை அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி அம்பாள் தேவஸ்தான பால் குட பவனி

Image
கல்முனை பெரிய நீலாவணை  அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி அம்பாள் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தையொட்டி  பால் குட பவனியுடனான  பாலாபிஷேக  பேரு விழாவும்  நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் வேண்டி  விசேட பூசை வழி  பாடுகளும்  நேற்று சனிக்கிழமை  இடம் பெற்றது. பெரிய நீலாவணை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானத் திலிருந்து அடியார்களின் பால் குட பவனி  அருள் மிகு ஸ்ரீ நாக கன்னி தேவஸ்தானத்தை சென்றடைந்து  அங்கு வழி  பாடுகளும் பாலாபிசேக பேரு விழாவும் இடம் பெற்றன.  அடியவர்கள் தங்களின் நேர்த்தியை நிறைவேற்ற  தீ சட்டி,நெய் விளக்கு, பால்குடம் சுமந்து பவனியாக சென்று பாலாபிசேகம் செய்தனர். பால் குட பவனியில்  பெரியநீலாவண யை  சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆன் பெண் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர் .