பள்ளிவாயல் விடயத்தில் பொலிசாரை தலையிட வேண்டாம் என பொலிசாருக்கு பிரதமர் உத்தரவு
20-12-2013 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 3.45 மணிவரை பிரதமர் தி.மு.ஜயரட்னவை பாராளுமன்றத்திலுள்ள அவரது பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் அரசாங்கத்திலுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ,அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இங்கு குறிப்பாக கொழும்பில் 3 பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு பொலிசார் உத்தரவுவிடுத்துள்ளது பற்றி கலந்துரையாடினர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்,சிரேஷ்ட அமைச்சர் பௌசி உட்பட அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,பஷீர் சேகுதாவூத்,அதாவுல்லாஹ் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், பைஸல் முஸ்தபா,காதர் ,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி அமைச்சர் அதாவுல்லா , பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ,பைசால் காசிம் உட்பட அரசாங்கத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமரிடம் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாயலை மூடுமாறு கூறுவத...