அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச கிளைகளின் தெரிவு
அம்பாறை மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் நகரங்களில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களுக்கான 2014 ஆம் ஆண்டுக்குரிய நம்பிக்கையாளர் சபை தெரிவுகள் மற்றும் அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச கிளைகளின் தெரிவு என்பன அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர் தலைமையில் இடம் பெறவுள்ளது..
இதற்கென அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர் அல் -ஹாஜ் ரிஸ்வி முப்தி அவர்களின் தலைமையிலான குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளனர் .
அதன் பிரகாரம் நாளை 07.12.2013 ஆந்திகதி காலை 7.00 மணிக்கு பொதுவில் பிரதேசத்துக்கான கூட்டம் பொத்துவில் ஜும்மா பள்ளிவாசலிலும் , அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேச கூட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு அட்டாளைச்சேனை சர்கியா அரபுக்கல்லூரி யிலும் ,நிந்தவூர் , ஒலுவில் ,பாலமுனை பிரதேசத்துக்கான கூட்டம் பிற்பகல் 6.00 மணிக்கு நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலிலும் மறுநாள் 08 ஆந்திகதி சம்மாந்துறை ,மாவடிப்பள்ளி ,இறக்காமம் பிரதேசத்துக்கான கூட்டம் காலை 7.00 மணிக்கு சம்மாந்துறை ஜமியதுல் உலமா கட்டிடத்திலும் , மருதமுனை, நற்பிட்டிமுனை ,சென்றல்கேம் பிரதேச கூட்டம் முற்பகல் 11.00 மணிக்கு மருதமுனை அந் -நஹ்ழா அரபுக் கல்லூரியிலும் ,சாய்ந்தமருது ,கல்முனை பிரதேசத்துக்கான கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் நடை பெறவுள்ளது .
அதேவேளை மாவட்டக் கிளை கூட்டமும் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர் அல் -ஹாஜ் ரிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் ஞாயிற்று கிழமை 08 .12.2013 பிற்பகல் 4.00 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அம்பாறை மாவட்ட ஜமியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்,எச்.ஆதம் பாவா செய்து வருகின்றார்
Comments
Post a Comment