குரும்பை விழுந்து குழந்தை மரணம்
யு.எம்.இஸ்ஹாக்
தென்னை மரத்தில் இருந்து குரும்பை வீழ்ந்து 03 மாதக் குழந்தை பரிதாப மரணமடைந்த சம்பவம் நேற்று 06.12.2013 வெள்ளிகிழமை கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது;
கல்முனை மனச்சேனை இலங்கை மின்சார சபை வீதியில் வசிக்கும் ரமேஸ் தஷ்னி ஆகியோரின் புதல்வியான திசோ ரமி என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த தனது பிள்ளையை தூங்க வைப்பதற்கு தோழில் அணைத்தபடி தாய் அயல் வீட்டுக்கு சென்றவேளையே அந்த வீட்டு தென்னையில் இருந்து குரும்பை குழந்தையின் தலையில் விழுந்துள்ளது . கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டபோதே அங்கு குழந்தை இறந்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்
Comments
Post a Comment