கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவி ஸம்ஹா எழுதிய ஆங்கில கவிதை நூல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவி ஸம்ஹா  எழுதிய ஆங்கில கவிதை நூல்   வெளியிடப்பட்டது.
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.பி்.பாத்திமா சம்ஹா எழுதிய  ' Breeze in Life'     எனும் ஆங்கில கவிதை நூல்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசிம் பிரதம அதிதியாகவும் கல்முனை பிரதேச செயளாலர் எம்.எம்.நௌபல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் கல்முனை கல்வி வலயத்தின் ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் விஷேட அதிதியாகவும் கலந்து கொள்வதுடன் பாடசாலையின் பிரதி,  அதிபர் திருமதி என்.பி.ஏ.கரீம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொணடு சிறப்பித்தார்கள்.


இம்மாணவி கடந்தவருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய பின் கிடைத்த விடு முறையில் தமது தந்தையின் ஆதரவுடனே இந்நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்