முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. ஏனைய மாகாணங்கள் முறையே மேல்மாகாணம், சப்பிரகமுவ, வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், வடமாகாணம் ஆகியன அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டன.

கடந்த வாரம் நாவலப்பிட்டி வெலியத்த மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமைத்தாங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற இந்த  இவ்விளையாட்டு விழாவில், 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் குழுக்கள் பங்கு பற்றின.



இவ்விளையாட்டு விழா இறுதி நிகழ்வில், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர், ஊவா மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாவலப்பிட்டி நகர சபை முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டு விழாவில், தடகள மெய்வல்லுனர், கிரிக்கட், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், உதை பந்தாட்டம், கயிறு இழுத்தல் உள்ளடங்கலாக அனைத்துப் போட்டிகளும் அடங்கியிருந்தன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி