கிழக்கில் நிலவும் இதே காலநிலை தொடரும்
கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வடக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமென அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையானது பிற்பகல் அல்லது இரவு வேளையில் பெய்யும் என்றும், சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும்காற்று வீசும் என்று குறிப்பிட்டிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளது.
Comments
Post a Comment